தப்லீக் ஜமாஅத் மீது அவதூறு – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (09 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி…

மேலும்...

கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை!

பாட்னா (09 ஏப் 2020): கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் கயா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர் பஞ்சாபிலிருந்து திரும்பியிருந்தார். அவர் பஞ்சாபின் லூதியானாவில் இரண்டு மாத கர்ப்பினியாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென குழந்தை கலைந்து விட்டது. உடனே மருத்துவர்களின் பரிந்துரைப்படி பஞ்சாபில் D and C செய்யப்பட்டது. அதன் பின்பு பீகாருக்கு திரும்பியிருந்தார். ஆனால் அவருக்கு இரத்தப் போக்கு…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு கை வைத்தியம் மூலம் மருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சித்தூர் (09 ஏப்ரல் 2020): கொரோனாவுக்கு டிக்டாக் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை பார்த்து கைவைத்தியம் மூலம் மருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவைப் பற்றியும், பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த சிறிய கிராமமான அலப்பள்ளியில், ஊமத்தங்காயை அரைத்து அதில் கசாயம் வைத்துக்…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு மருத்துவர் மரணம்!

இந்தூர் (09 ஏப் 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா…

மேலும்...

போக்குவரத்து காவலர் மரணம் – ஸ்டாலின் பரபரப்பு கருத்து!

சென்னை (09 ஏப்ரல் 2020): சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் 24 மணிநேர பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவர் அருகில்…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மூன்று நாட்கள் மட்டுமே கெடு!

வேலூர் (08 ஏப் 2020): வேலூர் மாவட்டத்தில் மளிகை சாமான்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வாங்க முடியும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் விதமாகவும், வியாழன் (09.04.2020) முதல் வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், சூப்பர் மார்கெட், டிப்பார்மென்டல் ஸ்டோர்கள் ஆகிய வாரத்தின் திங்கள், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டுமே இயங்கும்….

மேலும்...

பிரதமர் மோடியை சிக்க வைக்கும் முயற்சியா? – மோடியின் பரபரப்பு ட்வீட்!

புதுடெல்லி (08 ஏப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே சோகத்தில் இருக்க, ‘பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்’ என்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ” எனக்காக அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. முதலில் பார்க்கும்போது என்னைத் தகராறில் சிக்க வைக்க பெயரை பயன்படுத்தி சதி…

மேலும்...

ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த தமிமுன் அன்சாரி புது ஐடியா!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்த மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி யோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கும் முடிவை முதல்வர் அறிவித்தார். தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஓயாத…

மேலும்...

கொரோனாவால் தந்தை மரணம் – மகன்கள் மீது வழக்கு!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறப்படும் கீழக்கரையைச் சேர்ந்தவரின் இரு மகன்கள் மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது முதியவர், துபாயிலிருந்து சென்னை திரும்பிய நிலையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி திடீரென சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். உடன் அவரது உடல் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப் பட்டது. உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டுச் சென்று, அடக்கம்…

மேலும்...