ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த தமிமுன் அன்சாரி புது ஐடியா!

Share this News:

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்த மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி யோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கும் முடிவை முதல்வர் அறிவித்தார்.

தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஓயாத நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் பதினோராம் வகுப்பில் தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது.

எனவே ஊரடங்கு நாட்கள் முடிந்த பின்னர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வகுப்புத் தேர்வுகளாக நடத்தி பள்ளி ஆசிரியர்களே விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டு மதிப்பெண்களை உடனடியாக வெளியிடும் நடவடிக்கை மேற்கொண்டால் எந்தவித தேக்கமும் இருக்காது.

காலதாமதம் இன்றி பதினோராம் வகுப்புச் சேர்க்கையை நடத்த ஏதுவாகவும் இருக்கும். இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply