வாவ் அஜீத் – ரூ 1.25 கோடி வழங்கி அசர வைத்து அதிரடி!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் தடுப்பு பணிகளுக்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் பிரதமரும், பல மாநில அரசுகளும் பொதுமக்கள், பிரபலங்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். அதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அளிக்கப்படும் நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்று அறிவித்தார். இதனைத்…

மேலும்...

கொரோனாவின் கோரமுகம் – வீதிகளில் வீசப்படும் உடல்கள்!

குவிட்டோ (08 ஏப் 2020): கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரில் மரணிக்கும் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈகுவேடார் உலகின் ஏழை நாடுகளில் ஒன்று. இங்கு சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 220 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கோரமுகத்தால் வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டு இருக்க, ஏழை நாடுகள் இதன் பாதிப்பால் தவித்துக் கொண்டு இருக்கின்றன. தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் பிப்ரவரி 15ம் தேதி கொரோனா…

மேலும்...

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் கொரோனாவுக்காக சேவையாற்றிய ஆண் செவிலியர்!

ஜெய்ப்பூர் (08 ஏப் 2020): மரணமடைந்த தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் மருத்துவ சேவை ஆற்றியுள்ளார் ஆண் செவிலியர் ஒருவர். ஜெய்ப்பூா் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராகப் பணிபுரிந்து வருபவா் ராமமூா்த்தி மீனா. அந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வாா்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்பட 103 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ராமமூா்த்தி தனது வீட்டுக்கு கூடச் செல்லாமல்…

மேலும்...

ஊடகங்களின் செய்தியை பார்த்து பதற்றம் அடைய வேண்டாம் – ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஏப் 2020): மரணித்த முஸ்லிமின் உடலை எரியூட்டப்படும் என்ற தவறான செய்தியை வெளியிட்ட கலெக்டரின் உத்தரவை பார்த்து முஸ்லிம்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “கோவிட் 19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் வேலூரில் 45 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை எரியூட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்து பலரும்…

மேலும்...

அறிவிப்பை திடீரென திரும்ப பெற்றது தமிழக அரசு!

சென்னை (07 ஏப் 2020): இரும்பு, உரம், காகிதம் உட்பட 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதைத் திரும்பப் பெறுவதாக இப்பொழுது அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், ஜவுளி (பின்னாலாடைத் தொழில் தவிர்த்து), சர்க்கரை ஆலைகள், கண்ணாடித்…

மேலும்...

பிரபல இந்தி நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அதிர்ச்சியில் பாலிவுட்!

மும்பை (07 ஏப் 2020): பாலிவுட் நடிகையான ஷஜா மொரானிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷஜா மொரானி பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் மகளாவார். நடிகர் ஷாரூக் கான் தயாரித்த ஆல்வேஸ் கபி கபி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். தன் மகளும் நடிகையுமான ஷஜா மொரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை கரீம் மொரானி உறுதி செய்துள்ளார். திங்களன்று ஷஜா மொரானி தமக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தார். அன்று, மாலை அவருக்கு…

மேலும்...

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு சென்றவர்கள் எத்தனை தெரியுமா?

சென்னை (07 ஏப் 2020): தமிழகத்தில் இதுவரை 19 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரை 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தில் 19 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை : 5,305. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வந்த தகவல் பொய்யானது – துணை ஆணையர் விளக்கம்!

பெங்களூரு (07 ஏப் 2020): “தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து பாஜக எம்பி வெளியிட்ட தகவல் பொய்யானது.” என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு நாடெங்கும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அதில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் அளிக்கப் பட்டு வருகின்றன. இதற்கிடையே தப்லீக் ஜமாஅத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நேற்று…

மேலும்...

இந்தியாவின் முடிவில் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (07 ஏப் 2020): அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அந்த மருந்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவ்வாறு இந்தியா மருந்தை அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை…

மேலும்...

இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன் (07 ஏப் 2020): மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு சர்ப்பரைஸ் காத்திருக்கிறது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் அமெரிக்கா பெரும் பாதிப்பை கண்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா இந்த நோயை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது. இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர்…

மேலும்...