வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பால் விலைகளைக் குறைக்கிறது மெக் டொனால்டு உணவகம்!

ரியாத், சவூதி (29 நவம்பர் 2023): மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மெக் டொனால்ட் உணவங்களில் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் மெக் டொனால்ட் உணவை புறக்கணித்ததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கடந்த 50 நாட்களாகத் தொடர்ந்து குண்டு வீசி இனப்படுகொலை செய்து வருகிறது. போர்க் குற்றமாக கருதப்படும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களைக் குறி வைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேலிய ஆதரவு (Support):…

மேலும்...

என் மகள் காஸா-வில் ஒரு ராணியாக உணர்ந்தாள் – இஸ்ரேலிய தாய் எழுதிய கடிதம்!

பாலஸ்தீன் (29 நவம்பர் 2023): ஹமாஸ் போராளிகள் சமீபத்தில் விடுவித்த பெண் பிணைக் கைதி, டேனியல் அலோனி (Danielle Aloni).  இவர், ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி கூறி ஹீப்ரு மொழியில் எழுதியுள்ள கடிதம் உலகை அதிர வைத்துள்ளது.  இக் கடிதத்தில், ஹமாஸ் படையினரின் நன்னடத்தைக்கும் பிணைக் கைதிகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டமைக்கும் நன்றி கூறியுள்ளார். இஸ்ரேலின் மொஸாத், ஒரு சக்தி வாய்ந்த உளவுப்படை என உலகம் நம்பிக் கொண்டிருக்கும் அமைப்பு ஆகும். கடந்த அக்டோபர் 07 ஆம்…

மேலும்...

தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!

பாலஸ்தீன் (27 நவம்பர் 2023): கடந்த 50 நாட்களாக நிலவும் போர்ச் சூழலில், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் அடியோடு நிலைகுலைந்து போயுள்ளது காஸா நகரம்.  இந்த போர்ச்சூழல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நான்கு நாட்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. போர் பதட்டத்தின் காரணமாக காஸாவில் வசிக்கும் 17 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான உயிர் இழப்புகளால், பிணங்களை ஒரே புதைகுழியில் அடக்கம் செய்து வருகின்றனர். இச்சூழலில், காஸா…

மேலும்...

பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

பாலஸ்தீன் (22 நவம்பர் 2023): பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 50 நாட்களாக காஸா- பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் குண்டு மழையை நிறுத்தி பாலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வரும் கத்தார், இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு காஸா பகுதியில் முழுமையாக போர் நிறுத்தப் படுகிறது. தரை வழியாகவோ, வான்…

மேலும்...

இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது. இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தாரின்…

மேலும்...

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் பொய் புகார்!

பாலஸ்தீன்(08 நவம்பர், 2023): பாலஸ்தீனில் உள்ள “ஷேக் ஹமத் பின் கலீஃபா” மருத்துவனைக் கட்டடத்தின் கீழ் பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது என இஸ்ரேல் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதனால், சமீபத்தில் இம் மருத்துவமனையும் இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் காரணமாக, பாலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஐநா மையங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இன்று வரை பாலஸ்தீனில் 10,600 பொதுமக்கள்…

மேலும்...

இந்திய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

கராச்சி: துபையிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி பயணித்த இந்தியன் எக்ஸ்ப்ரஸ் விமானம், அவசர கதியில் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. துபையிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி IX192 என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் விமானம் 14/10/2023 அன்று காலை வந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் மீது பறந்து கொண்டிருக்கும் போது, பயணி ஒருவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கோரினார். உரிய…

மேலும்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்...

துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது!

இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம்…

மேலும்...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி…

மேலும்...