
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களித்தது இந்தியா!
பாலஸ்தீன் (13 நவம்பர் 2023): காஸா-வை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருந்தைக் கண்டித்து உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து ஐ.நா சபையில் சமீபத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து தன் நிலைபாட்டை தெரிவித்துள்ளது. காஸா-வில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ஐநா அகதிகள் முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காஸாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டுகள்…