டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு யார் அனுமதி அளித்தது? சரத்பவார் கேள்வி!

மும்பை (07 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முகநூல் பதிவில் மகாராஷ்டிர மக்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணராமல் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கடந்த…

மேலும்...

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்!

பீஜிங் (07 ஏப் 2020): சீனாவில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் இதுவரை 81,708 பேரை கொரோனா நோய்த்தொற்று தாக்கியுள்ளது. அவா்களில், 1,299 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 77,078 போ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனா். 3,331 போ் உயிரிழந்துவிட்டனா். இந்த நோய்த்தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவிட்டனா். இதனிடையே, நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தரைவழி, வான்வழி போக்குவரத்து…

மேலும்...

லண்டன் ஹரே கிருஷ்ணா இஸ்கான் ISKCON ஆலயத்தில் கடுமையான கொரோனா பாதிப்பு!

லண்டன் (07 ஏப் 2020): கொரோனா COVID-19 வைரஸால் இங்கிலாந்திலுள்ள ஹரே கிருஷ்ணா அமைப்பான இஸ்கான் (ISKCON) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலண்டனிலுள்ள அந்த கோயிலைச் சேர்ந்தவர்களுள் இருபத்தொன்று பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பக்தர்கள் மரணமடைந்துள்ளார்கள். இறந்தவர்களின் பெயர்கள் அவர்களது குடும்பத்தினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர்களுள் ஒருவர் பக்தி சாரு சுவாமியின் சீடரான, எழுபது வயதைக் கடந்த ராமேஸ்வர தாஸ் ஆவார். இங்கிலாந்தில் உள்ள பல கோயில்களுக்கு இவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டியுமாவார்….

மேலும்...

உலக தலைவர்களை அச்சுறுத்தும் கொரோனா – பிரிட்டிஷ் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி!

லண்டன் (06 ஏப் 2020): கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்த வைரஸால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் உலகத் தலைவா்களில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்…

மேலும்...

மும்பையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மும்பை (06 ஏப் 2020): மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதித்ததால் அப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று வரை 748 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 33 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளது. புனேவில் 19 பேர், மும்பையில் 11 பேர், சதரா, அகமெத்நகர் மற்றும் பல்கர் மாவட்டத்தில் தலா ஒருவர் என…

மேலும்...

ஊரடங்கில் உறைந்து போயிருக்கும் ஏழைகளுக்கு உதவிய மேலக்காவேரி முஸ்லிம்கள்!

கும்பகோணம் (06 ஏப் 2020): ஊரடங்கு உத்தரவால் உறைந்து போயிருக்கும் ஏழை மக்களுக்கு மேலக்காவேரி முஸ்லிம் அமைப்பினர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளது. இதனால் வீடற்றோர், விதவைகள், தினசரி கூலியாட்கள், வயோதிகர்கள், சில பல ஏழைக் குடும்பத்தினர்கள் உணவுக்கு வழியின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பசியைப் போக்கும் விதமாக மேலக்காவேரி முஸ்லிம் பரிபாலன சபை (MMWA) உறுப்பினர்கள், கும்பகோணம், மேலக்காவேரி, சுவாமிமலை பகுதியில் உள்ளோருக்கு…

மேலும்...

தீபம் ஏற்றும் போது தீ விபத்து – பதறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்!

சென்னை (06 ஏப் 2020): சென்னை எண்ணூரில் கொரோனாவை எதிர்த்து தீபம் ஏற்றியபோது விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதனால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் ஏப்ரல்…

மேலும்...

பிரதமர் மோடியின் கோரிக்கையை மீறிய பாஜக எம்.எல்.ஏ!

ஐதராபாத் (06 ஏப் 2020): விதிகளை மீறி கூட்டமாக நின்று பாஜக எம்.எல்.ஏ கொரோனாவுக்கு எதிராக நடத்திய தீப்பந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை அணைத்து 9 நிமிட நேரம் அகல் விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி…

மேலும்...

அரசு இன்றே நடவடிக்கையில் இறங்க வேண்டும் – ப.சிதம்பரம் கோரிக்கை!

சென்னை (06 ஏப் 2020): பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பிரதமர் மோடியும் எதிர் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அறிஞர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து தனது…

மேலும்...

கொரோனாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் பலி!

வாஷிங்டன் (06 ஏப் 2020): கொரோனா உலகம் முழுவதும் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,272,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 262,217 பேர் குணமடைந்தனர். மேலும் 45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்ததுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 69,424 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இத்தாலியில் . இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

மேலும்...