தப்லீக் ஜமாஅத் மீது அவதூறு – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Share this News:

புதுடெல்லி (09 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது.

ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டம் குறித்து மட்டுமே ஊடகங்கள் செய்தி வெளியிடுவதோடு, தப்லீக் ஜமாஅத்தினரே கொரோனாவை பரப்பியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் போலி வீடியோக்களும் உலா வருகின்றன. இவை அனைத்தும் முஸ்லிம்களை குறி வைத்தே பரப்பப்பட்டு வருகின்றன என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ‘பொய்யான தகவல்களை பரப்பி ஒரு சமூகத்தினரை குற்றவாளியாக சித்தரிப்பதை உடனே நிறுத்த வேண்டும்’ என ஜமியத் உல் உலமா சார்பில் வழக்கறிஞர் இஜாஸ் மக்பூல் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதில், “தப்லீக் ஜமாஅத் கூட்டம் தற்செயலாக நடந்த ஒன்றே. ஆனால் அது திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் சித்தரிக்கப் படுவதையும், பொய்யான தகவல்களை பரப்புவதையும் உடனே நிறுத்த வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கையினை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

Source: Times of India


Share this News:

Leave a Reply