போக்குவரத்து காவலர் மரணம் – ஸ்டாலின் பரபரப்பு கருத்து!

Share this News:

சென்னை (09 ஏப்ரல் 2020): சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் 24 மணிநேர பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், “பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருக்கடியான இக்காலத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை, மனஅழுத்தம் ஏற்படாதவாறு DGP-யும், அரசும் அக்கறை காட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply