அப்போது இல்லை என்றார்கள் இப்போது இருக்கிறது என்கிறார்கள் – கொரோனா சோதனை சொதப்பல்!

சென்னை (11 ஏப் 2020): சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த சென்னை தம்பதியினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள கடையில் பணியாற்றிய மூவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வீண் விவாதம் வேண்டாம் – மன்சூர் காஷிபி கோரிக்கை!

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிக்கப் பட்டவர்களாக கூறப்படும் தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் வீண் விவாதம் வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காஷிபி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள கோரிக்கையில், “தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாஅத்தினரின் எண்ணிக்கை குறித்து சிலர் சமூக வலைதளங்களில் சந்தேகம் கிளப்பியுள்ளனர். தமிழக அரசு தெளிவாகவே விளக்கம் அளித்து வருகிறது. இதில் சந்தேகிக்க எதுவும் இல்லை. தமிழகத்திலிருந்து டெல்லி சென்றவர்கள்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினருக்கு கொரோனா பாஸிடிவ் ஆனால் அறிகுறிகள் இல்லை – குழப்பத்தில் மருத்துவத்துறை!

சென்னை (10 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர் சிலருக்கு கொரோனா பாஸிட்டிவ் என கூறப்பட்டபோதும் யாருக்கும் அறிகுறிகள் இல்லதது மருத்துவத்துறையினரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களில் அதிகமானோர் தப்லீக் ஜமாஅத்தினரே என்று தமிழக சுகாதாரத்துறை தினமும் அளித்து வரும் தகவல்கள் படி தெரிய வருகிறது. அதேவேளை அவர்கள் யாருக்கும் எந்தவித கொரோனா அறிகுறிகளும் காணப்படவில்லை என்பதுதான் மிகபெரிய கேள்விக்குறி. இது இப்படியிருக்க,…

மேலும்...

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் – வைகோ!

சென்னை (10 ஏப் 2020): “கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation-ILO) உலகின் தற்போதைய பொருளாதாரச் சூழல் பற்றி ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்….

மேலும்...

தனிமைப் படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன? – தமிழக அரசு விளக்கம்!

சென்னை (10 ஏப் 2020): கொரரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்பட்டு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்சவசமும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது….

மேலும்...

கொரோனா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுல்சில் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (10 ஏப் 2020): இந்தியாவில் எந்த வித பயணமும் மேற்கொள்ளாமல், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ளாத நிலையில் 40 சதவீதத்தினர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களில் 36 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 104 நபர்களில் 40 பேர் எவ்வித பயண வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை. இந்த குறிப்பிட்ட…

மேலும்...

வேத பாடசாலையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி தகவல்!

திருமலை (10 ஏப் 2020): திருமலை வேத பாடசாலையில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் 470 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு பொதுத் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன். விடுதிகளில் தங்கி படித்த நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல்  திருமலையில் உள்ள…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் மீது ஊடகங்களின் அவதூறு செய்தி – ஆனால் அரசு சொல்லும் தகவல் வேறு.

புதுடெல்லி (10 ஏப் 2020): அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் 11 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜீ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் அச்செய்தி உண்மையில்லை என்பதை அரசு சொல்லும் தகவல் உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா தொற்று உலகமெங்கும் அதிவேகமாக பரவி பல உயிர்களை பலிகொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றன. ஆனால் இந்தியாவில் இவ்விவகாரத்தை வைத்து மத அரசியல் கொடி கட்டி பறக்கிறது. குறிப்பாக இந்துத்வா ஆதரவு ஊடகங்கள் பல போலி…

மேலும்...

கொரோனா பாதிப்பில் கோவை இரண்டாம் இடம் வகிக்கிறதே ஒருவேளை அதுதான் காரணமா?

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் வகித்தாலும் தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டம் இடம் வகிக்கிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 199 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 834 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவை இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் பலரும் கொரோனா பாதிப்பிற்கு டெல்லி…

மேலும்...

நடிகர் சல்மான்கான் தினக் கூலிகளுக்கு செய்த பிரமிக்க வைக்கும் உதவி!

மும்பை (09 ஏப் 2020): இந்தி நடிகர் சல்மான் கான் தினக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 3000 வழங்கி உதவி புரிந்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு நாடெங்கும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தவிர தினக்கூலிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தினக்கூலிகள் 25000 பேருக்கு தலா ரூ 3000 வீதம் வழங்கி பெரும் உதவி புரிந்துள்ளார். இவற்றை ஒவ்வொருவருக்கும்…

மேலும்...