கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (13 ஆக 2021): சவூதியில் ‘தவக்கல்னா’ அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சவூதியில் ‘தவக்கல்னா’ என்ற அப்ளிகேஷன் அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் அரசு சார்ந்த பல சொந்த விவரங்கள் அந்த அப்ளிகேஷனில் உள்ளடக்கியிருக்கும். கொரோனா பாதித்தவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டது உறுதி செய்யப்பட்டவை அனைத்தும் அதில் பதிவாகியிருக்கும். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இரு டோஸ் தடுப்பூசி போட்டதுபோல் மோசடி செய்ய உதவியதாக சிரியாவை சேர்ந்த இருவரையும்,…

மேலும்...

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சித் தகவல்!

திருவனந்தபுரம் (12 ஆக 2021): இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகும் 40 ஆயிரம் பேருக்குக் கேரளாவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே தற்போது அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக கேரளா இருந்துவருகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகும் 40 ஆயிரம் பேருக்குக் கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு சக்தியை ஊடுருவும் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ்…

மேலும்...

காலாவதியான துபாய் விசா காலம் நீட்டிப்பு!

துபாய் (12 ஆக 2021): ஐக்கிய அரபு எமிரேட்சீல், வெளிநாட்டவர்களின் காலாவதியான விசா காலம் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசா காலாவதியாகி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நவம்பர் 9 க்குள் துபாய் திரும்ப வேண்டும் என்று விசா சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல எமிரேட்ஸ் இணையதளத்தில் உள்ளபடி, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களும் துபாய்க்கு வரலாம். அதேபோல வேலை மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு பொருந்தும் நிபந்தனைகள் சுற்றுலா விசாக்களுக்கும் பொருந்தும் என்று எமிரேட்ஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...

மீண்டு வரும் சவூதி அரேபியா!

ரியாத் (12 ஆக 2021): சவுதி அரேபியாவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பிலிருந்து அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பல வகையான மரபு மாற்றங்களால் அச்சுறுத்தி வருகிறது. எனினும் தொடக்கத்திலிருந்தே சவுதி அரேபியாவில் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் கொரோனா பாதிப்பு, கடந்த மூன்று தினங்களாக பெருமளவில் குறைந்து வருகிறது. மேலும் நேற்று மட்டும் கொரோனா பாதித்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் 1389 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா…

மேலும்...

பிரபல பாடகி குழந்தை பிறந்த சில நாட்களில் கொரோனாவால் மரணம்!

மலேசியா (11 ஆக 2021): பிரபல மலேசிய பாடகி சித்தி சாரா ரைசுதீன், குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். எட்டு மாத கர்ப்பிணி சித்தி சாரா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டார். இந்நிலையில் அதனால் அவரது ஆண் குழந்தையை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். இருப்பினும் கோமாவில் இருந்த சித்தி சாரா ரைசுதீன்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை கைப்பற்றப்பட்டது. சித்தி சாராவுக்கு பிறந்த ஆண் குழந்தை அவருக்கு நான்காவது குழந்தையாகும்.

மேலும்...

வெளிநாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மக்காவிற்கு வர அனுமதி!

மக்கா (10 ஆக 2021): வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு இன்று முதல் மக்காவில் உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் மக்காவிற்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் பெற்றவர்கள் ஆன் லைன் மூலம் அனுமதி பெற்று உரிய நடைமுறைகளை பின்பபற்றி உம்ராவிற்கு வரலாம். ஆனால் 12…

மேலும்...

சவூதி அரேபியாவில் சமூக கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை!

ரியாத் (09 ஆக 2021): சவூதி அரேபியாவில் கோவிட் பரவலை தடுக்கும் ஒரு பகுதியாக சமூக கூட்டங்களுக்கான தடை தொடரும் என்று சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க கடந்த வருடம் முதல் தொடரும் இந்த தடை இப்போது தொடரும் என்று சவூதி சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி திருமண மண்டபங்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் போன்ற இடங்களில் கூடும் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது. கோவிட் பெருக்கத்திற்கு இத்தகைய கூட்டங்களே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும்,…

மேலும்...

கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!

துபாய் (09 ஆக 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வர அனுமதிவழங்கப்பட்டுள்ளனர். துபாய் திரும்புவதற்கு விசா வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றிருந்தால் இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்களுக்குப் துபாய் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இது மான நிறுவனங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது குறித்து உறுதியற்ற தன்மை இருந்த நிலையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவூதியில் பள்ளிக்கூடங்களை திறக்க அனுமதி!

ரியாத் (08 ஆக 2021): புதிய கல்வி ஆண்டில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சகம் தயாராகி வருகிறது. கோவிட் 19 பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய கல்வியாண்டில் பள்ளிகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பள்ளிகளில் காலை கூட்டங்கள் மற்றும் விளையாட்டு…

மேலும்...

கொரோனாவால் உயிரிழக்கும் சுகாதார பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு!

ரியாத் (08 ஆக 2021): சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது. சவுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அனைத்து சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு , 5 லட்சம் சவூதி ரியால் (1 கோடி ரூபாய்) வழங்கப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளதாக சவூதி பத்திரிக்கை நிறுவனம் (SPA) செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் தவிர சிவில் அல்லது இராணுவத் துறைகளில் பணியாற்றியவர்களுக்கும் இழப்பீடு…

மேலும்...