காலாவதியான துபாய் விசா காலம் நீட்டிப்பு!

Share this News:

துபாய் (12 ஆக 2021): ஐக்கிய அரபு எமிரேட்சீல், வெளிநாட்டவர்களின் காலாவதியான விசா காலம் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விசா காலாவதியாகி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நவம்பர் 9 க்குள் துபாய் திரும்ப வேண்டும் என்று விசா சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல எமிரேட்ஸ் இணையதளத்தில் உள்ளபடி, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களும் துபாய்க்கு வரலாம். அதேபோல வேலை மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு பொருந்தும் நிபந்தனைகள் சுற்றுலா விசாக்களுக்கும் பொருந்தும் என்று எமிரேட்ஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply