TN-Students

ஆசிரியர்கள் மணவர்கள் அதிர்ச்சி – இருவருக்கு கொரோனா பாதிப்பு!

கடலூர் (04 செப் 2021): கடலூர் மஞ்சக்குப்பம் கோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் அரியலூர் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதன் பயனாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக 9, 10, 11,…

மேலும்...

துபாயில் கொரோனாவால் ஒரு மரணம் கூட இல்லாத நாள் இன்று!

துபாய் (03 செப் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் தினமும் ஒருவரையாவது இழந்து கொண்டு இருக்கிறது. இந்நிலைய்ல் கடந்த ஆண்டு நவம்பர் 14 அடுத்து துபாயில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு கோவிட் மரணம் கூட பதிவாகவில்லை. கடுமையான கோவிட் விதிகள் மற்றும்…

மேலும்...

சவூதியில் 200 க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு!

ரியாத் (01 செப் 2021): சவூதியில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி சுகாதார அமைசகத்தின் அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 185 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன மேலும் 7 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இது சவூதியில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 544,634 ஆகவும், வைரஸ் தொடர்பான மரணம் 8,552 ஆகவும் உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 301 பேர் குணமடைந்துள்ளனர், இதனால்…

மேலும்...

கேரளாவை மிரட்டும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 32,803 பேர் பாதிப்பு!

திருவனந்தபுரம் (01 செப் 2021): இந்திய அளவில் கேரளாவில் மட்டுமே அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் மட்டும் 32,803 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்திய அளவில் 41965 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 460 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

மேலும்...

கோவிட் நடைமுறை சில தளர்வுகளை அடுத்து இந்தியாவிலிருந்து சவூதிக்கு இந்தியர்கள் வருகை!

ஜித்தா (30 ஆக 2021): சவுதியில் இரண்டு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் வேறு நாட்டில் தனிமைப்படுத்தல் இன்றி சவூதி திரும்பலாம் என்ற உத்தரவை அடுத்து இந்தியர்கள் சவூதி அரேபியா வர தொடங்கியுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 395 பயணிகளுடன் ஜித்தா வந்த சவூதி அரேபின் ஏர்லைன்ஸ் சார்ட்டட் விமானத்தில், வந்த பயணிகள் ஏஜெண்டுகள் அரை லட்சத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கூறினர். ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் வருவதற்கு சவூதி அரேபியா தடை விதிக்கவில்லை என்கிற போதிலும், புதிய…

மேலும்...

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (28 ஆக 2021): இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, சனிக்கிழமை 46,759 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, கொரோனா வழக்கு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 40,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 32,801 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 4,654 வழக்குகளும், தமிழ்நாடு 1,542 வழக்குகளும், ஆந்திரப் பிரதேசம் 1,512 வழக்குகளும், கர்நாடகா 1,301 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில்…

மேலும்...

சினோஃபாம் மற்றும் சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு சவூதி அரேபியா அனுமதி

ரியாத் (25 ஆக 2021): சவூதி அரேபியா மேலும் இரண்டு கோவிட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் பாயன்டெக், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மோடெனா ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும், சீன தடுப்பூசிகளான சினோஃபாம் மற்றும் சினோவாக்கிற்கு சவுதி சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை ஆறாகக் கொண்டுவருகிறது. அதேவேளை முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஜான்சன்…

மேலும்...

சவூதியிலிருந்து விடுமுறையில் இந்தியா சென்றவர்களுக்கு நற்செய்தி!

ரியாத் (24 ஆக 2021): சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்தியர்கள், மூன்றாம் நாட்டில் தனிமைப்படுத்தல் தேவையில்லாமல் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள் அறிவித்தனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்திய குடிமக்கள் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள்…

மேலும்...

இந்தியாவுக்கான விமான தடையை நீக்கியது ஓமான்!

மஸ்கட் (24 ஆக 2021): இந்தியாவுக்கான விமான தடையை ஓமான் அரசு நீக்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஓமான் தடை விதித்திருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஓமான் அரசு விதித்திருந்த விமானம் மற்றும் தரை கப்பல் போக்குவரத்து தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஓமான் அரசு அங்கிகரித்துள்ள Oxford AstraZeneca, Pfizer, Sputnik மற்றும் Synovac கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் பெற்றவர்கள் ஓமானுக்கு வரலாம். அதேவேளை இரண்டாவது…

மேலும்...

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பது சிரமம் – எச்சரிக்கை அறிக்கை!

புதுடெல்லி (23 ஆக 2021): நாட்டில் கோவிட் மூன்றாவது அலை அக்டோபரில் தாக்கலாம் என்றும், தற்போதுள்ள வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் தாக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அறிக்கை ஒன்றை பி ரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில்,…

மேலும்...