ஒன்றிய அரசின் முடிவுக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு!

புதுடெல்லி (24 பிப் 2022): பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவிற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், பெண்ணின் திருமண வயதை அந்தந்த சமூகமே தீர்மானிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் ஒன்றிய அரசின் நடவடிக்கையில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகிறது.’ ஆதிவாசிகள் மற்றும் கிராமப்புறங்களில் இளவயது திருமணங்கள் நடைபெறுகின்றன. இது கல்வியை சீர்குலைத்து, ஆரம்பகால கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஒன்றிய அரசு…

மேலும்...

பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள்…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – தேர்வு எழுத முடியாத நிலையில் கர்நாடக முஸ்லிம் மாணவிகள்!

பெங்களூரு (24 பிப் 2022): ஹிஜாப் தடை விவகாரத்தால் கர்நாடக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு) மற்றும் (12ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவான மனுதாரரின் தந்தையின் உணவகம் மீது தாக்குதல்!

உடுப்பி (23 பிப் 2022): பள்ளி கல்லுரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளவர்களில் ஒருவரான ஹஸ்ரா ஷிஃபாவின் தந்தைக்கு சொந்தமான உணவகத்தின் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஜாபுக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஹிஜாப் வழக்கின் மனுதாரர்களில் ஷிஃபாவும் ஒருவர். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தான் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் மனுதாரர் ஹஸ்ரா ஷிஃபாவின் சகோதரர் உணவகத்தை மூடும் போது அங்கு வந்த…

மேலும்...

கர்நாடகாவில் பஜ்ரங்தளை சேர்ந்தவர் கொலை – முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பிய வன்முறை!

ஷிமோகா (21 பிப் 2022): கர்நாடகாவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 26 வயதான ஹர்ஷா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பஜ்ரங் தள் பிரமுகரான ஹர்ஷாவைக் கொன்றது யார் என்பதில் தெளிவு இல்லாத நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினரும் மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களும் இந்தக் கொலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷிமோகா பகுதியில் பல…

மேலும்...

மட்டுத் தீவன ஊழல் 5 வது வழக்கீல் லாலு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டு சிறை!

பாட்னா (21 பிப் 2022): கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பீகார் முதலமைச்சராக லாலு பிராசத் யாதவ் இருந்தபோது 1990களில் தும்கா கருவூலத்தில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக லாலு பிரசாத்திற்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...

அனாதை இல்லத்தில் வளர்ந்த ஷபானா ஷேக் – நீட் தேர்வில் வெற்றி!

தானே (21 பிப் 2022): நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததன் மூலம், தன்னாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் 22 வயது அனாதை பெண் ஷபானா ஷேக். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஷபானா ஷேக் தனது ஒரு வயது சகோதரனுடன் மும்பை மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்டு பத்லாபூரைச் சேர்ந்த அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் அனாதை இல்ல ஆதரவுடன் கல்வி பயின்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதினர்….

மேலும்...

ஹிஜாப் முஸ்லீம் பெண்களின் முக்கிய கடமை – முன்னாள் நடிகை கருத்து!

புதுடெல்லி (20 பிப் 2022): ஹிஜாப் என்பது முஸ்லீம் பெண்கள் இறைவனுக்கு செய்யும் முக்கியமான கடமை என்று டங்கல் பட நடிகை சாய்ரா வசிம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உருவாகியுள்ள ஹிஜாப் விவகாரம் நாடெங்கும் பேசுபொருளாகியுள்ளது.பல பிரபலங்கள் ஹிஜாப் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நடிகை சாய்ரா வசிம் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹிஜாப் ஒரு தேர்வு மட்டுமல்ல, அது கடவுளுக்கு செய்யும் ஒரு கடமை,” என்று…

மேலும்...

50 வருடங்களாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பத்தினர்!

கொல்கத்தா (20 பிப் 2022): மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அங்குள்ள பராசத்தில் உள்ள அமனாதி மசூதியின் பராமரிப்பாளர்களாக கடந்த 50 ஆண்டுகளாக ஒரு இந்து குடும்பம் செயல்பட்டு வருகிறது. வடக்கு 24 பர்கானாவின் பராசத்தை சேர்ந்த மூத்த குடிமகன் தீபக் குமார் போஸ் மற்றும் அவரது மகன் பார்த்த சாரதி போஸ் ஆகியோர் தற்போதைய சூழலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த நாபோபள்ளி பகுதியில்…

மேலும்...

காவல்துறை காவலில் 18 வயது முஸ்லீம் சிறுவன் மர்ம மரணம்!

புதுடெல்லி (19 பிப் 2022): டெல்லியில் காவல்துறை காவலில் இருந்த 18 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பழுதுபார்ப்பவராக இருந்த 18 வயது சிறுவன் ஜீஷன் மாலிக் ப்ரீத், விஹாரின் குடிசைப் பகுதியில் வசித்து வந்தார். இவர் நவம்பர் 20, 2021 அன்று சிகரெட் பாக்கெட்டைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி 14 அன்று காவல்துறை காவலில் மாலிக் உயிரிழந்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 அன்று சிறுவன் ஜீஷன் மாலிக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக…

மேலும்...