50 வருடங்களாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பத்தினர்!

Share this News:

கொல்கத்தா (20 பிப் 2022): மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அங்குள்ள பராசத்தில் உள்ள அமனாதி மசூதியின் பராமரிப்பாளர்களாக கடந்த 50 ஆண்டுகளாக ஒரு இந்து குடும்பம் செயல்பட்டு வருகிறது.

வடக்கு 24 பர்கானாவின் பராசத்தை சேர்ந்த மூத்த குடிமகன் தீபக் குமார் போஸ் மற்றும் அவரது மகன் பார்த்த சாரதி போஸ் ஆகியோர் தற்போதைய சூழலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த நாபோபள்ளி பகுதியில் அமனாதி மசூதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகளாக, தீபக் போஸ் ஒரு பராமரிப்பாளராக ஒவ்வொரு நாளும் மசூதிக்குச் சென்று, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழுகையின் போது வசதியாக இருப்பதை உறுதி செய்கின்றனர். மேலும் அதன் நடைபாதைகளை சுத்தம் செய்கின்றனர்.

இதுகுறித்து போஸ் குடும்பத்தினர் தெரிவிக்கையில், “1964 கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த மசூதியை நாங்கள் அதை புதுப்பிக்க முடிவு செய்தோம், அதன்படி புதுப்பித்து நாங்கள் இந்த மசூதியை கவனித்து வருகிறோம். பல்வேறு பகுதிகளில் இருந்து முஸ்லீம் சமூகத்தினர் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு தொழுகை நடத்துவதற்கு ஒரு இமாமை நியமித்துள்ளோம், ”என்று மசூதியின் பராமரிப்பாளர் தீபக் குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

தீபக்கின் மகன் பார்த்த சாரதி போஸ் கூறும்போது, ​​“இந்துக்களாகிய நாங்கள் மசூதியை பராமரிப்பதை இதுவரை யாரும் எதிர்க்கவில்லை. நாங்கள் பல ஆண்டுகளாக மசூதியை கவனித்து வருகிறோம். உண்மையில், 2 கிலோமீட்டர் பரப்பளவில், மசூதிகள் எதுவும் இல்லை, எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் இங்கு பிரார்த்தனை செய்ய வருகிறார்கள்.

இமாம் சரஃபத் அலி, “உள்ளூர் மக்களிடமிருந்து நான் எந்த அச்சுறுத்தலையும் உணரவில்லை. நாங்கள் ஒற்றுமை மற்றும் அமைதியை நம்புகிறோம்.” என்றார்.


Share this News:

Leave a Reply