மட்டுத் தீவன ஊழல் 5 வது வழக்கீல் லாலு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டு சிறை!

Share this News:

பாட்னா (21 பிப் 2022): கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பீகார் முதலமைச்சராக லாலு பிராசத் யாதவ் இருந்தபோது 1990களில் தும்கா கருவூலத்தில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக லாலு பிரசாத்திற்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 12 பேர் குற்றமற்றவர்கள் என்றும் ராஞ்சி நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதற்கு முன்னரும் கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 3 வழக்குகளிலும் லாலு பிரசாத் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2018-ல் 4வது வழக்கிலும் அவரை குற்றவாளியாக அறிவித்து கூடுதல் சிறைதண்டனையை விதித்திருந்தது நீதிமன்றம்.

இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் தொடர்புடைய 5வது வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு வெளியானது.

முன்னதாக கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து, 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த 5வது வழக்கு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதிலும் அவர் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே லாலு பிரசாத் ஜார்க்கண்ட் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.


Share this News:

Leave a Reply