நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை – காங்கிரசுக்கு கடும் பின்னடைவு!

புதுடெல்லி (10 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 03 இடங்களிலும், காங்கிரஸ் 03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பஞ்சாப்…

மேலும்...

வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருட்டு – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

லக்னோ (09 மார்ச் 2022): உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வாரணாசியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். “2017 இல், கிட்டத்தட்ட 50 இடங்களில் பாஜகவின் வெற்றி வித்தியாசம் 5,000 வாக்குகளுக்கும் குறைவாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார். டிரக்கில்…

மேலும்...

முஸ்லீம்களுக்கு விழிப்புணர்வு – ஆர்எஸ்எஸ் முஸ்லீம் பிரிவு தகவல்!

புதுடெல்லி (07 மார்ச் 2022): முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தப்போவதாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தை திருமண தடை (திருத்த) மசோதா 2021ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா…

மேலும்...

ஹைதர் அலி சிஹாப் தங்கள் மறைவு – முஸ்லீம் லீக் இரங்கல்!

திருவனந்தபுரம் (06 மார்ச் 2022): இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கேரள மாநிலத் தலைவரும், நபிகள் நாயகத்தின் பரம்பரை வழிவந்தவருமான ஹைதர் அலி சிஹாப் தங்கள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. இந்நிலையில் அவரது மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது; இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில தலைவரும் இயக்கத்தின் அரசியல், ஆன்மீக வழிகாட்டி நபிகள் நாயகம் அவர்களுடைய…

மேலும்...

ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்ற மாணவி மீது ஏபிவிபி உறுப்பினர்கள் துன்புறுத்தல்!

மங்களூரு (05 மார்ச் 2022): கர்நாடகா மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி ஹிஜாப் அணிந்ததற்காக அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். பி. சதீஷா பாய் அரசு முதல் தர கல்லூரி மாணவி ஹிபா ஷேக், அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் தன்னை துன்புறுத்தியதாக பந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “நான்  கல்லூரியில் தேர்வு…

மேலும்...

ஜெய் மோடிஜி என்று சொல்ல மறுத்த மாணவர்கள் – வைரலாகும் வீடியோ!

புதுடெல்லி (04 மார்ச் 2022): உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் விமானத்தில் ஜெய் மோடிஜி என்று அழைப்பதற்கு மறுப்பு தெரிவித்து அமைதி காத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள் அண்டைய நாடான ருமேனியாவிற்கு வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களை ஏற்றி வந்தபோது மாணவர்கள் விமானத்தில் ஏறிய பின், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் கோஷங்களை எழுப்பினார். அவர்…

மேலும்...

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய ஒருவர் மாணவர் படுகாயம்!

புதுடெல்லி (04 மார்ச் 2022): ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சில நாட்களில், உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ANI இடம் பிரத்தியேகமாகப் பேசிய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான (MoS) இணை அமைச்சர் (MoS) ஜெனரல் VK சிங், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். “கியேவில் வசித்து வந்த இந்திய மாணவர் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதற்கிடையே எல்லோரும் கியேவை விட்டு…

மேலும்...

உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவர் மரணம்!

புதுடெல்லி (02 மார்ச் 2022): உக்ரைனில் மற்றும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர். உயிரிழந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சிறிது காலம் மருத்துவமனையில் இருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது குடிமக்கள் அனைவரையும் உடனடியாக கார்கிவை விட்டு வெளியேறுமாறு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்கள் பெசோசின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா குடியிருப்புகளை அடைய வேண்டும்…

மேலும்...

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள்!

புதுடெல்லி (28 பிப் 2022): உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 7 விமானங்களை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்த இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சென்று அடைக்கலமாகி உள்ளனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நான்கு ஏர் இந்தியா விமானங்கள், ஒரு இண்டிகோ விமானம்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவது கடினம் – அதிர்ச்சியில் பாஜக!

லக்னோ (27 பிப் 2022): உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என பா.ஜ.க வின் உள்கட்சி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சமாஜ்வாதி – ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி, லக்கிம்பூர் கெரியில் நடக்கும் வன்முறைகள், தேர்தலில் பாஜகவை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்….

மேலும்...