ஒன்றிய அரசின் முடிவுக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு!

Share this News:

புதுடெல்லி (24 பிப் 2022): பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவிற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், பெண்ணின் திருமண வயதை அந்தந்த சமூகமே தீர்மானிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் ஒன்றிய அரசின் நடவடிக்கையில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகிறது.’

ஆதிவாசிகள் மற்றும் கிராமப்புறங்களில் இளவயது திருமணங்கள் நடைபெறுகின்றன. இது கல்வியை சீர்குலைத்து, ஆரம்பகால கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது.

அதேவேளை இதுபோன்ற விவகாரங்களில் அரசு ஒரு எல்லைக்கு மேல் தலையிட கூடாது என்றும், சில விஷயங்களை சமூகத்திற்கு விட்டுவிட வேண்டும், ”என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மார்ச் 11 முதல் 13 வரை அகமதாபாத்தில் நடைபெறும் அகில இந்திய பிரதிநிதிகள் சபை (ஏபிபிஎஸ்) கூட்டத்தில் திருமண வயது மற்றும் ஹிஜாப் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூடுதல் விவாதத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply