பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

Share this News:

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கியமாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷிய ராணுவம் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது.


Share this News:

Leave a Reply