ஹிஜாப் விவகாரம் – மாணவிகள் கல்லூரியிலிருந்து இடை நீக்கம்?

பெங்களூரு (19 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா கல்லூரியிலிருந்து 58 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கல்லூரி முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஷிவமோகா மாவட்டத்தில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய கர்நாடகா கல்லூரி மாணவர்கள் 58 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வெளியானது. கல்லூரி விதிகளை மீறியதால் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக முதல்வர் மாணவர்களிடம் கூறிய வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன. “துணை எஸ்பி உள்ளிட்டோர் மாணவிகளை சமாதானப்படுத்த…

மேலும்...

அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை!

அஹமதாபாத் (18 பிப் 2022): அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேர் பலியானார்கள், 200 பேர் காயமடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதில், 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக இந்த…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – பேராசிரியர் பணியை விட்டு விலகிய கல்லூரி விரிவுரையாளர்!

பெங்களூரு (18 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாபை கைவிடச்சொன்னதால் மறுத்து பேராசிரியர் பணியை கைவிட்டுள்ளார் பெண் விரிவுரையாளர் ஒருவர். கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆசிரியர் பணியின் போது ஹிஜாபைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் பேராசிரியையாக பணிபுரியும் ஆங்கில விரிவுரையாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். ஹிஜாப் இல்லாமல் என்னால் கற்பிக்க முடியாது, ”என்று அவர் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு கூறினார். “மூன்று வருடங்களாக ஜெயின் பியு…

மேலும்...

சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடை – கர்நாடக அரசு உத்தரவு!

பெங்களூரு (17 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்து சிறுபான்மை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுபான்மை நலன், ஹஜ் மற்றும் வக்ஃப் துறை செயலாளர் மேஜர் பி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு உத்தரவு சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் மௌலானா ஆசாத் மாதிரிப் பள்ளிகளுக்கும் (ஆங்கில மீடியம்) பொருந்தும். ) சில சிறுபான்மை நிறுவனங்களில்…

மேலும்...

கர்நாடகாவை அடுத்து ஆந்திராவிலும் ஹிஜாப் தடை!

விஜயவாடா (17 பிப் 2022): விஜயவாடாவில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்புகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சினையை தாங்கள் எதிர்கொண்டதில்லை என்றும், தங்களது அடையாள அட்டைகளில் கூட புர்காவுடன் புகைப்படங்கள் இருப்பதாகவும் விஜயவாடா மாணவிகள் தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண பெற்றோர்கள், சமூக பெரியவர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினரிடம் பேசி வருகின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – 30 மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளிநடப்பு!

பெங்களூரு (16 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஷிவமோகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 30 மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளிநடப்பு செய்தனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு நாடெங்கும் விவாத பொருளாகியுள்ளது. இந்திய அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவின்படி முக்காட்டை கழற்றுமாறு…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்தியா பதில்!

புதுடெல்லி (16 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பில்…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவான மனுதாரர்களின் தனிப்பட்ட விவரங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக!

பெங்களூரு (15 பிப் 2022): ஹிஜாபுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ள மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிட்டு அசிங்கமான செயலை செய்துள்ளது கர்நாடக பாஜக. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இதில் ஹிஜாபை அனுமதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் ஐந்து பேரின் முகவரிகள் அடங்கிய தனிப்பட்ட விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக பிரிவு இணையத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் வீட்டு முகவரிகள் கர்நாடக பாஜக ட்விட்டர் பக்கத்தில்…

மேலும்...

ஹிஜாபை கழற்ற மாட்டோம் – பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி சென்ற மாணவிகள்!

பெங்களூரு (15 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான விவாதம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவிகள் தலை தாவணியை (ஹிஜாபை) கழற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிவதில் உறுதியாக இருப்பதால் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகளை கல்லூரி அதிகாரிகள் திருப்பி…

மேலும்...

மத்திய பிரதேசத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி!

போபால் (15 பிப் 2022): கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம் தற்போது மத்திய பிரதேசத்திற்கும் பரவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி முதுநிலை கல்லூரி திங்கள்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் மாணவர்கள் ‘மதம் சார்ந்த’ உடைகள் அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்திருந்த இரு மாணவிகளுக்கு எதிராக காவி சால்வை அணிந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கல்லூரி…

மேலும்...