விநாயகர் ஊர்வலத்தின்போது இரு பிரிவினர் இடையே மோதல்!

வதோதரா (30 ஆக 2022): குஜராத்தில் வதோதரா பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதோதராவில் “திங்கள்கிழமை இரவு விநாயகர் ஊர்வலம் பானிகேட் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, கல்வீச்சு ஏற்பட்டதாகவும், அப்போது கல் ஒன்று மத ஸ்தலத்தின் ஜன்னலில் பட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளது. மேலும் சிறுபான்மையினர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.இதனை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. கலவரப் பிரிவின் கீழ் இரு குழுக்களுக்கு எதிராக…

மேலும்...

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல்!

புதுடெல்லி (26 ஆக 2022): மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார் மேலும் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதியுள்ள ஆசாத், “மிகுந்த வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் இந்திய தேசிய காங்கிரஸுடனான எனது அரை நூற்றாண்டு தொடர்பைத் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். ஜெய்வீர் ஷெர்கில், கபில் சிபல், அஸ்வனி குமார், ஹர்திக் படேல் மற்றும் சுனில்…

மேலும்...

எம்.எல்.ஏ.க்களை வாங்க ரூ.800 கோடி ஒதுக்கிய பாஜக- முதல்வர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஆக 2022): டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக 800கோடி ஒத்துக்கியிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது. இதனால் டெல்லி…

மேலும்...

முஹம்மது நபிக்கு எதிரான பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு புனித மக்கா, மதீனா ஹரமைன் ஷரீபைன் கடும் கண்டனம்!

மக்கா (24 ஆக. 2022): முகமது நபிக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்த இழிவான கருத்துக்கு, மக்கா செய்தி ஊடகமான ஹரமைன் ஷரிஃபைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளும் பாஜகவின் தெலுங்கானா மாநில உறுப்பினரான ராஜா சிங் எம்.எல்.ஏ, திங்கள் கிழமை அன்று சமூக வலைதளத்தில் முகமது நபிக்கு எதிரான அவதூறான கருத்துக்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பின. இதனால் தெலுங்கானா மாநிலத்தில்…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கு – 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (23 ஆக 2022): பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை அங்கு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியாட்டத்தில் கர்ப்பிணி பெண்ணான 21 வயது பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதோடு அவரது குழந்தை உட்பட 7 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…

மேலும்...

முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய பாஜக எம்எல்ஏ கைது!

ஐதராபாத் (23 ஆக 2022): முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா  பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக சில வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பினார். இதனை அடுத்து தெலுங்கானாவில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. மேலும் ராஜா சிங்கிற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ராஜா சிங் செவ்வாய் கிழமை காலை போலீசாரால் கைது…

மேலும்...

தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு!

ஜெயப்பூர் (23 ஆக 2022): ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஹிந்தவுன் கிராமத்தில் தலித் மைனர் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரில் ஆகஸ்ட் 17 அன்று இரவு எனது15 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக புகாரில் கூறியதாக சுராத் போலீஸ் அதிகாரி ஷெரீப் அலி கூறினார். பல தேடுதலுக்குப் பிறகும், அவர் கிடைக்கவில்லை ஆகஸ்ட் 19 அன்று…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல்!

புதுடெல்லி(22 ஆக 2022): டெல்லி ஜந்தர் மாந்தரில் விவசாயிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து விவசாயிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விட்டுத்தனர். இதனையொட்டி டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக காஜிபூரில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். எனினும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் விவசாயிகள் திங்களன்று டெல்லி ஜந்தர் மந்தரை அடையத் தொடங்கியுள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) மற்றும்…

மேலும்...

தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை என்ன?

புதுடெல்லி (21 ஆக 2022): தக்காளிக் காய்ச்சல் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். தக்காளி காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படும் முதன்மை அறிகுறிகள் சிக்குன்குனியாவைப் போலவே இருக்கும், இதில் அதிக காய்ச்சல், உடல் தடிப்பு மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஆகியவை அடங்கும். மேலும் கோவிட்-19 நோயாளிகள் அனுபவிக்கும் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மூட்டு வீக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர்ப்போக்கு, ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். தக்காளி காய்ச்சலுக்கான சிகிச்சையானது சிக்குன்குனியா, டெங்கு ,கொரோனா நோய்களுக்கான சிகிச்சையைப் போன்றது….

மேலும்...

மாட்டுக்காக 5 பேரை கொலை செய்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ – வைரல் வீடியோ!

ஜெய்ப்பூர் (21 ஆக 2022)’ ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா, 5 பேரை கொலை செய்துள்ளதாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து சக நண்பர்களிடம் அவர் பேசும் வீடியோவில் “பசுக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கொன்றதாக பெருமையாக கூறுகிறார். இந்த வாக்குமூலம் வீடியோ ஆதாரத்துட ன் சிக்கியதை அடுத்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வீடியோவை எதிர் கட்சி பிரமுகர்கள் பாகிர்ந்து அவர் மீது உரிய…

மேலும்...