விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல்!

Share this News:

புதுடெல்லி(22 ஆக 2022): டெல்லி ஜந்தர் மாந்தரில் விவசாயிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து விவசாயிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விட்டுத்தனர்.

இதனையொட்டி டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக காஜிபூரில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

எனினும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் விவசாயிகள் திங்களன்று டெல்லி ஜந்தர் மந்தரை அடையத் தொடங்கியுள்ளனர்.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) மற்றும் பல்வேறு விவசாய குழுக்களால் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply