பில்கிஸ் பானு வழக்கு – 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (23 ஆக 2022): பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை அங்கு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியாட்டத்தில் கர்ப்பிணி பெண்ணான 21 வயது பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதோடு அவரது குழந்தை உட்பட 7 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.15 வருடம் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி குஜராத் அரசால் விடுதலை செய்யபட்டனர்.

இந்த விடுதலை நாடெங்கும் கொந்தளிப்பை ஏறப்படுத்தியது. 11 பேர் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிகையும் எழுந்தது.

இந்நிலையில் இந்த விசுதலையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதி மன்றததில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் வழக்கறிஞர் அபர்ணா பட் மற்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் முன்வைத்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எற்றுக்கொள்வதாக கூறிய பெஞ்ச்
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டதா? என்று பெஞ்ச் வழக்கறிஞரிடம் வினவியது. இதற்கு பதிலளித்த சிபல் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. விடுதலை செய்ய உத்தரவிடவில்லை என்றார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட பெஞ்ச் ஆவணங்களை சரிபார்த்து விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply