தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு!

Share this News:

ஜெயப்பூர் (23 ஆக 2022): ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஹிந்தவுன் கிராமத்தில் தலித் மைனர் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரில் ஆகஸ்ட் 17 அன்று இரவு எனது15 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக புகாரில் கூறியதாக சுராத் போலீஸ் அதிகாரி ஷெரீப் அலி கூறினார்.

பல தேடுதலுக்குப் பிறகும், அவர் கிடைக்கவில்லை ஆகஸ்ட் 19 அன்று இரவில், கிராமத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனை அடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தனது மகளைக் கடத்திச் சென்றதாகவும், பின்னர் கால்நடைத் தொழுவத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பின்னர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது

மேலும் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தங்கள் வீட்டை எரித்து விடுவோம் என்று குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply