பெங்களூரு மழை வெள்ளத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும் கரணம் என்ன தெரியுமா?

பெங்களூரு (07 செப் 2022): பெங்களுருவில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமுமே காரணம் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில், இதுபோன்ற கனமழை முன்னர் பெய்தது கிடையாது. என்று முதல்வர்…

மேலும்...

2024 தேர்தலை குறி வைத்து முக்கிய தலைவர்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு!

புதுடெல்லி (07 செப் 2022) : பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவும் டெல்லியில் சந்தித்து பேசினர். 2024 தேர்தலை எப்படி எதிர் கொள்வது என எதிர் காட்சிகள் ஆலோசித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் திங்கள்கிழமை முதல் டெல்லி வந்துள்ளார். 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக நிதிஷ்குமார் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார். திங்கள்கிழமை அவர் டெல்லியில் ராகுல்…

மேலும்...

ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்கள் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்!

வாரணாசி (06 செப் 2022): ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிலையை இந்துக்கள் தரிசனம் செய்ய அனுமதி கோரிய வழக்கில் இவ்விவகாரத்தில் முஸ்லீம் தரப்பினர் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. உத்திர பிரதேசம் வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள “ஆதிவிஷேஷ்வரை” ‘தரிசனம்’ செய்யக் கோரி விஸ்வ வைதிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிரண் சிங் பிசென், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த வளாகத்திற்குள் முஸ்லிம்கள் நுழைவதை…

மேலும்...

சித்திக் கப்பனுக்கு தீவிரவாத தொடர்பு – உ.பி அரசு!

புதுடெல்லி (06 செப் 2022): சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு உத்திர பிரதேச அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மீதான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த உபி அரசு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கும் அமைப்புகளுடன் கப்பனுக்கு தொடர்பு இருப்பதாகவும், சித்திக் கப்பன் தீவிர பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பாட்டாளர் என்றும், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கப்பனின் கணக்கில் வந்த ரூ.45,000க்கான ஆதாரம் தெளிவாக இல்லை…

மேலும்...

சிறையில் உரிமைகள் மறுக்கப்படும் பெண்கள் – தீஸ்டா செடல்வாட் ஆதங்கம்!

அகமதாபாத் (06 செப் 2022): வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கும் பல பெண்கள் விடுதலைக்கு தகுதியுடையவர்களாக உள்ளனர் எனினும் அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது என்று அகமதாபாத் சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட் தெரிவித்துள்ளார். 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு எதிராக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக் கூறி வழக்கில் தீஸ்தா செடல்வாட் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமினில் வெளியாகியுள்ளார்….

மேலும்...

தேச விரோதி – ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் காவல்துறையில் புகார்!

புதுடெல்லி (06 செப் 2022): பிரபல ஊடகவியலாளரும் Alt News இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, காவல்துறையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது ஒரு கேட்சை கைவிட்டதால், கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் சமூக ஊடகங்களில் மோசமான ட்ரோலிங்கிற்கு உட்படுத்தப்பட்டார். சமூக…

மேலும்...

மினி மற்றும் மிடியுடன் மாணவிகள் பள்ளிக்கு வரலாமா? – ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை!

புதுடெல்லி (05 செப் 2022): கல்வி நிறுவனங்களுக்கு மாணவிகள் மினி அல்லது மிடி அணிந்து வர அனுமதிக்கலாமா? என்று ஹிஜாப் குறித்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடகா மாநில பாஜக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முந்தைய…

மேலும்...

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடம் – சாமியார் தற்கொலை!

பெங்களூரு (05 செப் 2022): கர்நாடகாவில் சித்ரதுர்கா முருகா மடத் துறவி சம்பந்தப்பட்ட பாலியல் ஆடியோ ஒன்று வைரலான நிலையில் குரு மடிவாலேஸ்வரா மடத்தின் பூடாதிபதி பசவ சித்தலிங்க சுவாமிகள் அவரது ரூமில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சித்ரதுர்கா மடத்தில் பெண்களும், சிறுமிகளும் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என்பது குறித்து இரு பெண்களுக்கு இடையே நடந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவாதத்தில் பசவ சித்தலிங்க சுவாமிஜியின் பெயரை இரண்டு…

மேலும்...

குறிவைக்கப்படும் மதரஸாக்கள் – அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் கண்டனம்!

புதுடெல்லி (05 செப் 2022): மதரஸாக்கள் குறி வைக்கப்படுவது குறித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் மதரஸாக்களை கணக்கெடுப்பது ஏன்? என அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. AIMPLB இன் செயற்குழு உறுப்பினர் காசிம் ரசூல் இலியாஸ் இதுகுறித்து கூறும்போது, “உத்தரப்பிரதேசம் மற்றும் அசாமில் மதரஸாக்கள் குறிவைக்கப்படுகின்றன. அஸ்ஸாமில், சில மதரஸாக்களை இடித்துவிட்டு பொதுவான பள்ளிகளாக மாற்றி வருகின்றன. மதக் கல்வியைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பதிலாக மதச்சார்பற்ற கல்வியை ஊக்குவிப்பதும்தான் பிரச்சினை என்றால்,…

மேலும்...

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது தாக்குதல்!

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அல்காபூர் எக்ஸ் ரோட்டில் இருந்து ஒரு பயணியை அழைத்து வருவதற்காக செய்யத் லத்தீப் என்ற யூபர் ஓட்டுநர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அவருடைய வாகனத்தை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட வலியுறுத்தியது. ஆனால்…

மேலும்...