முஹம்மது நபிக்கு எதிரான பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு புனித மக்கா, மதீனா ஹரமைன் ஷரீபைன் கடும் கண்டனம்!

Share this News:

மக்கா (24 ஆக. 2022): முகமது நபிக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்த இழிவான கருத்துக்கு, மக்கா செய்தி ஊடகமான ஹரமைன் ஷரிஃபைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளும் பாஜகவின் தெலுங்கானா மாநில உறுப்பினரான ராஜா சிங் எம்.எல்.ஏ, திங்கள் கிழமை அன்று சமூக வலைதளத்தில் முகமது நபிக்கு எதிரான அவதூறான கருத்துக்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார்.

இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பின. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. பாஜக எம்எல்ஏ வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் செய்தி ஊடகமான ஹரமைன் ஷரிஃபைன் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் ஆளும் பாஜக தலைவர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கிற்கும், முஹம்மது நபி குறித்த இழிவான கருத்துக்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வகுப்புவாத பதட்டங்களை உருவாக்கும் கூறுகளை நிறுத்தவும், இஸ்லாமோஃபோபியா பரவுவதைத் தடுக்கவும், மத நல்லிணக்கத்தைப் பேணவும் நடவடிக்கை எடுக்க சர்வதேச அமைப்புகளுக்கு ஹரமைன் ஷரீபைன் அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கனவே பாஜக செய்தி தொடர்பாளர் நிபுர் ஷர்மா முஹம்மது நபிக்கு எதிராக பேசிய இழிவான பேச்சுக்கு உலகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply