முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய பாஜக எம்எல்ஏ கைது!

Share this News:

ஐதராபாத் (23 ஆக 2022): முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா  பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக சில வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பினார்.

இதனை அடுத்து தெலுங்கானாவில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. மேலும் ராஜா சிங்கிற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து ராஜா சிங் செவ்வாய் கிழமை காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


Share this News:

Leave a Reply