முஸ்லீம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மங்களுரு (29 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் மங்களுரு அருகே வியாழன் மாலை முஸ்லிம் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் உயிரிழந்த முஸ்லிம் இளைஞர், மங்களூருவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சூரத்கல் அருகே உள்ள மங்கல்பேட்டையில் வசிக்கும் முகமது ஃபாசில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மங்களூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிரவீன் குமார் நெட்டாருவின் குடும்பத்தை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த சம்பவம்…

மேலும்...

உண்மை மட்டுமே சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் – ராகுல் காந்தி!

புதுடெல்லி (27 ஜூலை 2022): செவ்வாயன்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசாங்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த சர்வாதிகாரத்திற்கு உண்மைதான் முடிவு கட்டும் என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் “சர்வாதிகாரத்தைப் பாருங்கள், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதிக்க முடியாது. காவல்துறை மற்றும் ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், எங்களை கைது செய்தாலும், உங்களால் ஒருபோதும் எங்களை…

மேலும்...

குடியரசுத் தலைவரை அவமதித்த மோடி – வீடியோ இணையத்தில் வைரல்!

புதுடெல்லி (24 ஜூலை 2022): குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதிக்கும் விதமாக பிரதமர் மோடி நடந்துகொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இதற்கான பிரிவு உபசார நிகழ்வின் பொழுது மோடிக்கு, ராம்நாத் கனிவான வணக்கம் தெரிவித்தார்.     ஆனால் அதனை சட்டை செய்யாத பிரதமர் மோடி கேமராவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்...

பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் முஸ்லீம் வாலிபர் பலி!

மங்களுரு (22 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் பெல்லாரேயில் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 18 வயது முஸ்லிம் இளைஞர் வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள மொக்ரல் புதூரில் வசிப்பவர் முஸ்லிம் வாலிபர் மசூத். இவர் கர்நாடக மாநிலம் சுள்ளியா, களஞ்சாவில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் மசூத் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்….

மேலும்...

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாட்னா (22 ஜூலை 2022): இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் பயணி ஒருவர் பயணிப்பதாக வந்த தகவலை அடுத்து வியாழக்கிழமை இரவு பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் 6E2126 அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து வெடிகுண்டு வைத்திருந்ததாக கூறிய ரிஷி சந்த் சிங் என்ற அந்த பயணியை விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பயணி மனநிலை சரியில்லாதவர் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்புப் படை விரைந்து…

மேலும்...

பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் விடுதலை – வீடியோ!

புதுடெல்லி (21 ஜூலை 2022): ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டர். மத உணர்வை புண்படுத்தியதாக ஜுபைரின் பழைய ட்வீட்டர் பதிவை வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களிலும் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை இரவு திகாரில் இருந்து ஜுபைர் விடுவிக்கப்பட்டார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

மேலும்...

லூலூ மாலில் தொழுகை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல – அதிர்ச்சித்தகவல்

லக்னோ (18 ஜூலை 2022): உத்திர பிரதேசம் லூலூ மாலில் தொழுகை நடந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அங்கு தொழுகை நடத்தியவர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. லூலூ வணிக வளாகத்தின் மீது அவதூறு பரப்புவதற்கும் சமூகங்களுக்கிடையில் பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்துவதற்கும் வேண்டுமென்றே சிலர் செய்த செயல் என்று தெரியவந்துள்ளது. லூலூ மாலின் சிசிடிவி காட்சிகளில் எட்டு ஆண்கள் ஒன்றாக மாலுக்குள் நுழைவதைக் காட்டுகிறது. அவர்களில் யாரும் மாலைச்…

மேலும்...

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி (17 ஜூலை 2022) : நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர்…

மேலும்...

பக்ரீத் பாண்டிகையின்போது திறந்த வெளியில் விலங்குகளை பலியிட வேண்டாம் – இமாம்கள் கோரிக்கை!

புதுடெல்லி (09 ஜூலை 2022): பக்ரித்’ பாண்டிகையின்போது திறந்த வெளியில் விலங்குகளை பலியிட வேண்டாம் என்று நாட்டில் உள்ள பல ‘இமாம்கள்’ முஸ்லிம்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் ஜூலை10 அன்று ஹஜ்ஜூப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பக்ரீத் அன்று விலங்குகளை பலியிடும்போது அதனை பொது வெளியிலோ, அல்லது விலங்குகளை பலியிடுவதை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என இமாம்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என இமாம்கள்…

மேலும்...

ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (06 ஜூலை 2022): கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரம் தொடர்பாக  ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த தளத்தின் செயல்பாடு, அதில் பதிவு செய்யப்படும் பதிவுகள் போன்ற காரணங்களால் முரண்பாடு நீடித்து வருகிறது. இந்நிலையில், பதிவுகளை நீக்கும் பொருட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இந்த வழக்கை சில ஆதாரங்களுடன் ட்விட்டர் நிறுவனம்…

மேலும்...