பெண்கள் மீதான மரியாதை இதுதானா? – மோடி மீது மல்லிகார்ஜுன் கார்கே கடும் விமர்சனம்!

புதுடெல்லி (21 அக் 2022): பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், “பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை பாஜக கேபினட் அமைச்சர் நியாயப்படுத்துகிறார், மற்றொரு கற்பழிப்பு குற்றவாளியின் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை என்று பிரதமர் போதித்தது இதுதானா?’ என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்….

மேலும்...

ஹலால் உணவுக்கு எதிராக வீடு வீடாக சென்று இந்துத்துவாவினர் பிரச்சாரம்!

பெங்களூரு (20 அக் 2022): தீபாவளி பண்டிகையின் போது ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது என்று இந்துத்துவாவினர் வீடு வீடாக பிரச்சாரத்தை தொடங்கினர். மேலும் எல்லோருக்கும் ‘ஹலால் ஜிஹாத்’ கையேட்டை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்து ஜன ஜாக்ருதி சமிதி, ஸ்ரீராம சேனா, ராஷ்ட்ர ரக்ஷனா படே மற்றும் விஸ்வ ஹிந்து சனாதன பரிஷத் ஆகிய அமைப்புகள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு (ஏபிஎம்சி) வர்த்தகர்களுடன்…

மேலும்...

12 வயது சிறுவனுக்கு 2.9 லட்சம் ரூபாய் அபராதம்!

போபால் (20 அக் 2022: மத்திய பிரதேச மாநிலம் கார்கானில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அதிகாரிகள் பெரும் தொகை இழப்பீடு கோரியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேசம் கார்கோனில் வன்முறை ஏற்பட்டது. அப்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அடிப்படையில் அதிகாரிகள் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் . கார்கோனில் மோதல். மோதலின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து அண்டை வீட்டுக்காரர் அதிகாரிகளிடம் புகார் செய்ததையடுத்து, சிறுவன்…

மேலும்...

பில்கிஸ் பானு விவகாரத்தைப் பற்றி பேச மறுத்த ஆம் ஆத்மி தலைவர்!

அகமதாபாத் (20 அக் 2022): பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு தொடர்பான கேள்விகளை டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியா தட்டிக் கழித்தார். குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தின் போது சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க சிசோடியா மறுத்துவிட்டார். சமீப நாட்களில், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சார நிகழ்ச்சிகளில் சிசோடியா பங்கேற்றார். அப்போது, தேசிய ஊடகமான ஏபிபியின் நிருபர், பில்கிஸ் பானு விவகாரம்…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் நன்னடத்தை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி!

புதுடெல்லி (18 அக் 2022): பிகிஸ் பானு வழக்கில் எந்த நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அவரது 3 வயது குழந்தை உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ.,…

மேலும்...

நான் காங்கிரஸ் தலைவரானால் இதெல்லாம் நடக்கும் – சசிதரூர் உறுதி!

கவுஹாத்தி (16 அக் 2022): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜகவில் இணையும் காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்கு சேகரித்து கவுஹாத்தி சென்ற சசிதரூர் கூறுகையில், காந்தி குடும்பம் எப்பொழுதும் காங்கிரஸுடன் இருக்கிறது, நாங்களும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸின் வெற்றி என்ற…

மேலும்...

எம்.எல்.ஏக்கள் தொழிலதிபர்களுடன் உல்லாசம் – சிக்கிய இளம்பெண்!

கமல்ஹாண்டி (15 அக் 2022): ஒடிசாவில் எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்கள் என உல்லாசம் அனுபவித்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்த இளம் பெண் அர்ச்சனாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அர்ச்சனா நாக். மிக எளிய குடும்பத்தில் பிறந்த அர்ச்சனா நாக், 2015ஆம் ஆண்டில் புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்து தனியார் நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்த அர்ச்சனா, ஜெகபந்து…

மேலும்...

தலித் வீட்டில் முதல்வர் திடீர் விசிட் – பிராண்டட் டீதான் வேண்டும்- பகீர் கிளப்பும் வீடியோ!

பெங்களூரு (14 அக் 2022): தலித் சமூகத்தை சேர்ந்தவர் வீட்டில் பிராண்டட் டீதான் வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் பொம்மை, முன்னாள் முதலர் எடியூரப்பா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மற்றும் பாஜக தலைவர்கள் விஜயநகர மாவட்டம் கமலாபுராவில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை காலை சென்றனர். அங்கு காலை உணவையும் சாப்பிட்டனர். பின்னர்,…

மேலும்...

தொழுகைக்கு சென்றவர்கள் மீது கும்பல் தாக்குதல்!

குருகிராம் (13 அக் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போரா கலான் பகுதியில் உள்ள மசூதிக்கு புதன்கிழமை மாலை தொழுகைக்கு வந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒரு கும்பல் மசூதியையும் சேதப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த சுபேதார் நாசர் முஹம்மது, போரா கலான் பகுதியில் நான்கு முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாக தெரிவித்தார். புதன்கிழமை அவர்கள் மசூதிக்கு தொழுகைக்காக வந்தபோது, ​​சிலர் மசூதிக்குள் புகுந்து தாக்கினர். இனி இங்கு தங்கக்கூடாது…

மேலும்...

கல்லறைக்கு அனுப்படுவீர்கள் – வீடுகளை இடிப்போம் – காவல்துறை அதிகாரியின் துவேஷ பேச்சு!

லக்னோ (13 அக் 2022): உத்திர பிரதேசத்தில் துர்கா பூஜைக்கு தடையாக இருப்பவர்கள் கல்லறைக்கு அனுப்பப்படுவீர்கள், உங்கள் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்படும் என்று ஒரு காவல்துறை அதிகாரி துவேஷத்துடன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காடந்த 10 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பல்திராயா பகுதியில் நடந்த துர்கா பூஜை ஊர்வலத்தின்போது, ஊர்வலம் ஒரு மசூதியை நெருங்கியபோது, ஊர்வலத்தில் ஒழிக்கப்பட்ட பாடல் ​​உரத்த குரலில் பாடியதால் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்…

மேலும்...