ஹலால் உணவுக்கு எதிராக வீடு வீடாக சென்று இந்துத்துவாவினர் பிரச்சாரம்!

Share this News:

பெங்களூரு (20 அக் 2022): தீபாவளி பண்டிகையின் போது ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது என்று இந்துத்துவாவினர் வீடு வீடாக பிரச்சாரத்தை தொடங்கினர்.

மேலும் எல்லோருக்கும் ‘ஹலால் ஜிஹாத்’ கையேட்டை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்து ஜன ஜாக்ருதி சமிதி, ஸ்ரீராம சேனா, ராஷ்ட்ர ரக்ஷனா படே மற்றும் விஸ்வ ஹிந்து சனாதன பரிஷத் ஆகிய அமைப்புகள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன.

ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு (ஏபிஎம்சி) வர்த்தகர்களுடன் ஹலால் சான்றிதழைப் பெறச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தவுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18) அன்று ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களைப் புறக்கணிக்க இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. பொருட்களுக்கான ஹலால் சான்றிதழின் மூலம் பொருளாதார ரீதியாக ஒரு மதம் மற்றொரு மதத்தின் மீது அவர்கள் விருப்பத்தை திணிப்பதாக இந்துத்துவாவினர் தெரிவித்துள்ளனர்.

ஹலாலுக்கு எதிரான பிரச்சாரம் தீபாவளி பண்டிகை முடியும் வரை தொடரும் என இந்து ஜன ஜாக்ருதி கமிட்டியின் மாநில செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா அறிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply