இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – டெல்லியில் பரபரப்பு -VIDEO

புதுடெல்லி (29 அக் 2022): டெல்லியில் இருந்து பெங்களூரு பறக்கவிருந்த இன்டிகோ விமானத்தில் தீப்பொறி பறந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E-2131 இன்டிகோ விமானம் நேற்று இரவு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பறக்க தயாராக இருந்த விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு முழுவேகத்தில் சென்றபோது வலப்பக்க இருக்கைக்கு அருகே எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. டேக்…

மேலும்...

ஒரே நாடு ஒரே சீருடை – பிரதமர் மோடி பரிந்துரை!

புதுடெல்லி (28 அக் 2022): நாடு முழுவதும் காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் “ஒரே தேசம், காவல்துறைக்கான…

மேலும்...

மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று வெளிநாட்டவர்கள் கைது!

கவுஹாத்தி (28 அக் 2022): கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஹன்னா மைக்கேலா ப்ளூம், மார்கஸ் ஆர்னே ஹென்டிக் ப்ளூம் மற்றும் சுசன்னா எலிசபெத் ஹகன்சன் ஆகியோர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாடு கடத்தப்பட்டனர். இந்திய அதிகாரிகளுடன் ஸ்வீடன் தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை விடுவித்த போலீசார் பின்பு அவர்களை நாடுகடத்தினர். சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த இவர்கள்,…

மேலும்...

கர்நாடகாவில் நீடிக்கும் பதற்றம்!

கர்நாடகா (26 அக் 2022): கர்நாடகா ஷிமோகா மாவட்டத்தில் தனித்தனி சம்பவங்களில் இருவர் தாக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தொட்டபேட்டாவில் மார்க்கெட் ஃபௌசன், ஆசு என்கிற அசார் மற்றும் ஃபராஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குமார், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மார்க்கெட் ஃபவுசன் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள்…

மேலும்...

ஒருதலை காதல் – இளம்பெண் கழுத்தறுத்து கொலை!

கண்ணனுர் (23 அக் 2022): கேரளாவில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (23). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் பாட்டி மரணமடைந்ததை அடுத்து விஷ்ணுபிரியாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அக்டோபர் 22 ஆம் தேதி இறுதிச் சடங்கிற்காக சென்றுவிட்டனர். அப்போது விஷ்ணு பிரியா வீட்டில் தனியாகவே…

மேலும்...

செவிலியர் கூட்டு வன்புணர்வு – 17 வயது இளைஞர் கைது!

போபால் (23 அக் 2022): சத்தீஸ்கரில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியர் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 17 வயது இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார் இச்சம்பவத்தை கண்டித்து மாபெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தொலைதூர பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு குறித்து சுகாதார ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சத்தீஸ்கர் அரசை கேட்டுக் கொண்டனர். மேலும் “எங்களுக்கு பாதுகாப்பு தேவை. “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை…

மேலும்...

மருத்துவர்களின் அலட்சியம் – குழந்தைக்கு 70 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (23 அக் 2022): குஜராத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த குழந்தைக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் சுனிதா சவுத்ரி என்ற பெண்ணுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நவ்சாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் 28 வாரங்களில் குறை மாத்தில் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை 1,200 கிராம் எடையுடன் இருந்தது. 42 நாட்கள் ஐசியூவில் தங்கியிருந்த பிறகு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்தூக்கு கொண்டு…

மேலும்...

ரெயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது பாஜக தலைவர் புகார் – வீடியோ!

லக்னோ (22 அக் 2022): ரயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக தலைவர் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ரயிலில் நான்கு பேர் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி படம் பிடித்துள்ளார். கடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது நான்கு பேர் தொழுகை செய்துகொண்டு இருந்ததாகவும் மற்ற பயணிகள் செல்ல இடையூறாக வழியை…

மேலும்...

பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்யும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (22 அக் 2022): 2002 கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பெண்கள் அமைப்பின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மனுவுடன் இந்த மனுவையும் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக, 11 குற்றவாளிகளுக்கு விடுதலை…

மேலும்...

மதவெறுப்பூட்டும் பேச்சு – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

புதுடெல்லி (21 அக் 2022): மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் நடத்தும் வணிகங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவின் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது இந்த மனுவை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிருத்திகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு…

மேலும்...