12 வயது சிறுவனுக்கு 2.9 லட்சம் ரூபாய் அபராதம்!

Share this News:

போபால் (20 அக் 2022: மத்திய பிரதேச மாநிலம் கார்கானில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அதிகாரிகள் பெரும் தொகை இழப்பீடு கோரியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேசம் கார்கோனில் வன்முறை ஏற்பட்டது. அப்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அடிப்படையில் அதிகாரிகள் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் . கார்கோனில் மோதல். மோதலின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து அண்டை வீட்டுக்காரர் அதிகாரிகளிடம் புகார் செய்ததையடுத்து, சிறுவன் ஒருவனின் தந்தை கலு கானிடம் சிறுவன் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அதற்கான இழப்பீட்டை சிறுவனிடமிருந்து மீட்டுத் தருமாறு மாநில உரிமைகோரல் தீர்ப்பாயம் கேட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தச் சட்டங்கள் ஒரு மதப் பிரிவைச் சேர்ந்தவர்களைத் தேடி, குறிவைக்க தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நோட்டீஸ் கிடைத்ததில் இருந்து, தனது மகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் 12 வயது சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேசம் கார்கோனில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை அதிகாரிகள் புல்டோசர் இடித்துத்தள்ளியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply