இந்து அல்லாத இளைஞர்களிடம் வேண்டாம் – இந்து பெண்களுக்கு இந்து மகாசபை எச்சரிக்கை!

புதுடெல்லி (13 அக் 2022) இந்து அல்லாத இளைஞர்கள்களிடம் இந்து பெண்கள் மெஹந்தி இட்டுகொள்ளக் கூடாது என்று இந்து மகா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழன் இரவு நடைபெறும் கர்வா சௌத் பூஜைக்கு முன் இந்து பெண்கள் தங்கள் கைகளில் மெஹந்தியைப் பூசிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்து பெண்கள் முஸ்லீம் இளைஞர்களிடம் மெஹந்தி இட்டுக்கொள்ள கூடாது என இந்து மகா சபை எச்சரித்துள்ளது. கட்டௌலியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி, மெஹந்தி கடைகளைத் திறந்த முஸ்லீம்…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இரு மாறுபட்ட தீர்ப்பு!

புதுடெல்லி (13 அக் 2022): கர்நாடக அரசின் ஹிஜாப் தடை குறித்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனால் கர்நாடக நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை…

மேலும்...

10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க பரிந்துரை!

புதுடெல்லி (12 அக் 2022): 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் புதுப்பிப்பை ஆன்லைனிலும், ஆதார் மையங்களிலும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. https://myaadhaar.uidai.gov.in என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம். இது தவிர ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் அப்டேட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த…

மேலும்...

முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு – உத்திர பிரதேசத்தில் பதற்றம்!

கோண்டா (12 அக் 2022): உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி உள்ளூர் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்த்த ரிக்கி என்ற இளைஞர் முஹம்மது நபி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ரிக்கியின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்தது. பின்னர் நிலைமையை…

மேலும்...

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

புதுடெல்லி (11 அக் 2022): பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த மனு 32வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மனுதாரரை எச்சரித்தார்.

மேலும்...

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

குருகிராம் (10 அக் 2022): உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. டெல்லி அருகே குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சிறுநீரக பிரச்சனைகள் தவிர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றால் முலாயமின் உடல்நிலை மோசமடைந்தது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், ஐசியூவில் இருந்து சிசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முலாயம் சிங்…

மேலும்...

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிய போலீஸ்!

கான்பூர் (09 அக் 2022): உ.பி.,யில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரின் மொபைல் போனை, போலீஸ்காரர் ஒருவர் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மகாராஜ்பூர் காவலரான பிரஜேஷ் சிங், சனிக்கிழமை இரவு கான்பூரின் சத்மாரா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரின் அருகில் மொபைல் போனை பார்த்த பின்னர் போனை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் எல்லாவற்றையும் மேலே சிசிடிவியில் பதிவானதை அந்த போலீஸ் அறியவில்லை. இந்த…

மேலும்...

என்ஐஏ வால் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி முஹம்மது அமீன் சிறையில் மரணம்!

புதுடெல்லி (09 அக் 2022): என்ஐஏ வால் கைதாகி சிறையில் இருந்த கேரள இளைஞர் முஹம்மது அமீன் டெல்லியில் உயிரிழந்தார். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முஹம்மது அமீன், பெங்களூரில் மாணவராக இருந்தார்., ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மார்ச் 2021 இல் என்ஐஏ முஹம்மது அமீனை கைது செய்தது. முஹம்மது அமீன் மீது நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அமீனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் தாக்குதல் நடத்த…

மேலும்...

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ரவிபிரகாஷ் மீனா கைது!

ஜெய்ப்பூர் (08 அக் 2022): பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த் அ31 வயது ரவிபிரகாஷ் மீனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் உள்ள சபோதாரா பகுதியைச் சேர்ந்த ரவிபிரகாஷ் மீனா, டெல்லியில் உள்ள சேனா பவனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ ரகசிய தகவல்களை கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ஏஜெண்ட் அஞ்சலி திவாரி…

மேலும்...

பாஜக மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவிய முதல்வர்!

திஸ்பூர் (08 அக் 2022): அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜக மூத்த தலைவர் ஒருவரின் கால்களைக் கழுவிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, பெரியவர்களுக்கு மரியாதை செய்வது பாஜகவின் பாரம்பரியத்தின் அடித்தளம் என்றும், மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவியதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். கவுகாத்தியில் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

மேலும்...