தலித் வீட்டில் முதல்வர் திடீர் விசிட் – பிராண்டட் டீதான் வேண்டும்- பகீர் கிளப்பும் வீடியோ!

Share this News:

பெங்களூரு (14 அக் 2022): தலித் சமூகத்தை சேர்ந்தவர் வீட்டில் பிராண்டட் டீதான் வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் பொம்மை, முன்னாள் முதலர் எடியூரப்பா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மற்றும் பாஜக தலைவர்கள் விஜயநகர மாவட்டம் கமலாபுராவில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை காலை சென்றனர். அங்கு காலை உணவையும் சாப்பிட்டனர். பின்னர், காலை உணவின் படம் மற்றும் வீடியோவை முதல்வர் அலுவலகம் பகிர்ந்துள்ளது. முதல்வர் மற்றும் அவரது குழுவினர் அங்கு செல்வதற்கு முன்பே அதிகாரிகள் தலித் வீட்டில் சில அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்லது

அந்த வீடியோவில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் ஒரு அதிகாரி சாம்பிள் எடுக்கச் சொல்வது கேட்கிறது. எந்த கம்பெனியின் டீ? என கேட்கும் அதிகாரி புரூக் பாண்ட், கண்ணன் தேவன் போன்ற பிராண்டட் நிறுவனங்களின் தேயிலைத் தூளைப் பயன்படுத்தினால் போதும்,” என, அறிவுறுத்துகிறார்.

தலித் குடும்பத்தினரை பிராண்டட் பொருட்களை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகவும். முதலமைச்சருக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சங்பரிவாரத்தின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் தலித் வீட்டில் நடந்த சாப்பாட்டுக்கு சென்ற முதல்வரின் நடவடிக்கை மூலம் சங்க பரிவாரத்தின் உண்மை மனநிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தலித்துகளை இழிவுபடுத்துவதற்காக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தாரா? என காங்கிரஸ் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பாஜக பதிலளிக்கவில்லை.


Share this News:

Leave a Reply