முஸ்லிம் மதரஸாவில் நுழைந்து பூஜை நடத்திய இந்துத்துவா கும்பல் -வீடியோ!

பெங்களூரு (07 அக் 2022): கர்நாடக மாநிலம் பிதாரில் தசரா கொண்டாட்டத்தின் போது வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூத் கவான் மதரஸா வளாகத்திற்குள் புகுந்த இந்துத்துவா கும்பல் பூஜை நடத்தியுள்ளது. 1460 களில் கட்டப்பட்ட இந்த மதரஸா இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் மதரஸாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த மதரஸாவில் நுழைந்த கும்பல் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில்…

மேலும்...

கட்டிப்பிடித்த இளம்பெண் – முதியவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

மும்பை (07 அக் 2022): முதியவர்களை கட்டிப்பிடித்து செல்போன்கள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய இளம் பெண் கீதா படேல் என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையில் 72 வயதான முதியவர் ஷாப்பிங் முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது. கீதா ஆட்டோவை நிறுத்திவிட்டு லிப்ட் கேட்டாள். பின்னர் அந்த இளம் பெண் ஆட்டோவை ஒரு கட்டிடத்தின் முன் நிறுத்தச் சொல்லி முதியவரைக் கட்டித் தழுவி நன்றி செலுத்தினார். முதியவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை மாற்ற முடியுமா? – திக் விஜய் சிங் சரமாரி கேள்வி!

புதுடெல்லி (06 அக 2022): ஆர் எஸ். எஸ் தனது கொள்கைகளை மாற்ற முடியுமா? என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். நாக்பூர் தசரா விழாவின்போது மோகன் பகவத் ஆற்றிய தனது உரையில் பெண்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் வீட்டிற்குள் அடைத்து வைக்கக்கூடாது என்றும் கூறினார். இந்த முறை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த விஜயதசமி கொண்டாட்டத்தில் ஒரு பெண் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். எவரெஸ்ட் சிகரத்தை வென்ற…

மேலும்...

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விளம்பரத்தில் சாவர்க்கர் படம்!

மாண்டியா (06 அக் 2022): காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கரின் படம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மாண்டியாவில் அமைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டில் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டது. சாந்திநகர் எம்.எல்.ஏ என்.ஏ.ஹாரிஸ் பெயரில் ஃப்ளக்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் தாங்கள் ஒட்டவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார். சாவர்க்கருடன், ராகுல்…

மேலும்...

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

கட்வா (06 அக் 2022): உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கட்வாலில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. திருமண நிகழ்வுக்கு குடும்பத்தினர் சென்ற பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, திரௌபதி தண்டா பனிச்சரிவில் சிக்கிய 41 பேர் கொண்ட குழுவில் 15 பேர் மீட்கப்பட்டனர். 16 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின்…

மேலும்...

முஸ்லிமாக மாறிய பெண் படுகொலை!

பெங்களூரு (05 அக் 2022): கர்நாடகாவில் முஸ்லிமாக மாறிய இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் நாகாவி தாண்டா பகுதியைச் சேர்ந்த மீனாஸ் பெஃபாரி (35) என்பவர் சமீபத்தில் முஸ்லிமாக மாறினார். இந்நிலையில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் இந்துத்வாவினர் சேதனா ஹுலகண்ணவர, ஸ்ரீனிவாச ஷிண்டே மற்றும் குமார் மரனாபசாரி ஆகியோர் அவரை கொலை செய்துள்ளனர். கடக் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த மீனாஸ் பேக்கரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அவர் வெட்டிக்…

மேலும்...

தாயில்லா உலகை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது – சித்திக் காப்பன் மனைவி ரைஹானா உருக்கம்!

கோழிக்கோடு (05 அக் 2022) : தாயில்லாத உலகத்தில் வாழ்வதை சித்திக் கப்பனால் தாங்க முடியாது என சித்திக் கப்பனின் மனைவி ரைஹானா கூறியுள்ளார். உத்திர பிரதேசம் ஹத்ராஸ் தலித் பெண் படுகொலையைப் பற்றி தகவல் சேகரிக்கச் செல்லும்போது. செய்தியாளார் சித்திக் கப்பான் உத்திர பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்திக் கப்பன் தற்போது லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுஏபிஏ வழக்கில் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும் சித்திக் கப்பன் டெல்லியில் 6 வாரங்கள்…

மேலும்...

சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி (03 அக் 2022): சிறுபான்மையினர் நலத்துறையை மத்திய அரசு ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறையை 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மை விவகாரங்கள் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி அரசில் ஒரே முஸ்லீம் முகமான…

மேலும்...

பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

புதுடெல்லி (03 அக் 2022): தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டிற்கும் (பிஎஃப்ஐ) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுக்கும் (எஸ்டிபிஐ) எந்த தொடர்பும் இல்லை என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. PFI தொடர்பான அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீதான நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் SDPI யையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் PFI மற்றும் SDPI இடையே எந்த தொடர்பும் இல்லை…

மேலும்...

தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (30 செப் 2022): சிஏஏ வழக்கில் 2019 முதல் சிறையில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் தொடர்ந்து அவர் காவலில் இருக்க நேர்ந்துள்ளது. கடந்த. 2019 ஆம் ஆண்டு ஜாமியா நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசிய உரைக்காக ஷர்ஜீல் இமாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷர்ஜீல் இமாம் மீது பல வழக்குகள்…

மேலும்...