சர்வதேச அவமானங்களிலிருந்து மீளுமா இந்திய அரசு?

உலக அரங்கில் இந்தியாவுக்கென தனி ஒரு மதிப்பும் மரியாதையும் சுதந்திரம் பெற்ற காலம் முதல் தொடர்ந்து இருந்து வந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவுக்கான முக்கியத்துவத்தினை இதுவரை ஆட்சி செய்த அனைத்து தலைவர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடமுண்டு. வலதுசாரி சங்பரிவார சிந்தனை இஸ்லாமிய வெறுப்பு போன்ற அடிப்படையில் அரசியல் செய்து வந்தாலும் மோடி அவர்கள் வெளியுறவு கொள்கை விஷயத்தில் வெளிப்படையாக அந்த வெறுப்புக்கு மாற்றமாகவே நடந்துள்ளார். இதன் விளைவாக மேற்காசிய…

மேலும்...

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் சைமனின் உடலை வெளியே எடுக்க சென்னை நகராட்சி மறுப்பு!

சென்னை (27 ஏப் 2020): பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக டாக்டர் சைமனின் உடலை மீண்டும் வெளியே எடுக்க சென்னை மாநகராட்சி மறுத்துவிட்டது. நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கொண்டு…

மேலும்...

இந்தியாவில் வறுமை தாண்டவமாடும் – முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

புதுடெல்லி (27 ஏப் 2020): லாக்டவும் மேலும் தொடர்ந்தால் இந்தியாவில் வறுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை. உயிரிழப்புகளோடு சேர்த்து பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க மே 3 ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மந்தன் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட “கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்” என்கிற…

மேலும்...

பிளாஸ்மா தானம் எதிரொலி – ட்ரெண்டிங் ஆகும் தப்லீக் கதாநாயகர்கள்!

புதுடெல்லி (27 ஏப் 2020): கொரோனா பாதித்தவர்களுக்கு தங்களது பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில் தப்லீக் ஜமாத்தினர் சமூக வலைதளங்களில் ஹீரோக்களாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் உள் நுழைந்துவிட்ட போதிலும் மார்ச் மாதமே அது வீரியமானது. இந்நிலையில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக…

மேலும்...

டெல்லி தப்லீக் ஜமாத் தலைவருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவுகள் வந்தன!

புதுடெல்லி (27 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தல்விக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் உள் நுழைந்துவிட்ட போதிலும் மார்ச் மாதமே அது வீரியமானது. இந்நிலையில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக…

மேலும்...

கொரோனா பரவலை தடுக்க காஷ்மீர் மாணவிகள் செய்த மெச்சத்தக்க செயல்!

ஜம்மு (26 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக காஷ்மீர் மாணவிகள் சொந்தமாக தைத்த முக கவசத்தை பலருக்கும் இலவசாமக விநியோகித்தனர். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாடும், அங்கு வாழும் மக்களும் ஏதாவது ஒரு வகையில் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். பல உயிரிழப்புகளை சந்தித்துவிட்ட இந்த கொரோனா காலத்தில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதமும் வந்துவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பல பகுதிகளில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு…

மேலும்...

கொரோனா வைரஸ் : பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ள தமிழக முஸ்லிம்கள்!

திருச்சி (26 ஏப் 2020): கொரோனா பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வைரஸின் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ நோயிலிருந்து நிவாரணம் பெற்ற முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. ஜாதி மத பேதமின்றை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் டெல்லி தப்லீக் ஆலோசனை கூட்டத்துக்கு சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அரசின் உத்தரவை அடுத்து தானாகவே முன் வந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு…

மேலும்...

கொரோனா பீர் – தலைவலியில் மதுபான நிறுவனம்!

மெக்சிகோ (26 ஏப் 2020): கொரோனா என்ற பெயர் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்க கொரோனா பீர் என்ற பெயரில் உள்ள மதுபான நிறுவனம்தான் இப்போது செய்வதறியாமல் திணறி நிற்கிறது. மெக்சிகோ தயாரிப்பான கொரோனா பீர, கொரோனா நோய்க்கும், அந்த நிறுவனத்தின் பீருக்கும் எந்த தொடர்புமில்லை என பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது இது பீர்…

மேலும்...

அமெரிக்க நகரங்களில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது. அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனாவால் அதிக…

மேலும்...

சாலையில் கேட்பாடற்று கிடந்த பணம் – எடுக்க அச்சப்பட்டு போலீசுக்கு தகவல்!

சென்னை (26 ஏப் 2020): சாலையில் கேட்பாடற்று கிடந்த ரூபாய் நோட்டுகள் கொரோனாவை பரப்ப வீசப்பட்டதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொருக்குப்பேட்டை சாலையில், நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் கிடந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா தொற்று பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே நகர் போலீசார் ரூபாய் நோட்டுகள் இருக்கும் இடத்திற்கு…

மேலும்...