டெல்லி தப்லீக் ஜமாத் தலைவருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவுகள் வந்தன!

Share this News:

புதுடெல்லி (27 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தல்விக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் உள் நுழைந்துவிட்ட போதிலும் மார்ச் மாதமே அது வீரியமானது.

இந்நிலையில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக இந்துத்வாவினரால் வதந்தி பரப்பப் பட்டது. மேலும் அரசின் பரிந்துரைப்படி டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையே டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தலைவர் மவுலானா சாத் கந்தல்விக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்கு பதிந்தது.

இது இப்படியிருக்க அவர் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்கள் கதை கட்டின. இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த வாரம் பேட்டியளித்த மவுலானா சாத், “எங்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கின்றனர். எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தப்படுகிறது. எனினும் இதற்காக யாரையும் குற்றம் சாட்ட மாட்டேன். எல்லாம் சூழல்தான் காரணம். எனினும் எங்கள் மீதான நியாங்கள் குறித்து பலருக்கும் தெரியும். நீதிமன்றமும் எங்களின் உண்மைத் தன்மையை உணரும்.

கொரோனா பாதிக்கப் பட்டு தற்போது நிவாரணம் பெற்று வீடு திரும்பும் தப்லீக் ஜமாத்தினர் அவர்களது பிளாஸ்மாவை இன மத பேதமின்றி அனைவருக்கும் தானமாக வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனிமைப் படுத்தப்பட்டு இருந்த மவுலானா சாத் கந்தல்விக்கு மருத்துவர்கள் அறிவுரைப்படி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply