கொரோனா எதிரொலி – காய்கறி கடையாக மாறிய நகைக்கடை!

ஜெய்ப்பூர் (02 மே 2020): கொரோனா பரவல் எதிரொலியாக நகைக்கடை வைத்திருந்தவர் அந்த கடையை காய்கறிக் கடையாக மாற்றியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா பொதுமக்களை பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நகைக் கடை வைத்திருந்த சோனி என்பவர். நகைக்கடையை தற்போது காய்கறிக் கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” மக்களுக்கு இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையே அதிகரித்துள்ளது. எனவே எனக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான்…

மேலும்...

சென்னையில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

சென்னை (02 மே 2020): சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக்கோரி சென்னை கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போலீஸ் வாகன முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சிறப்பு ரெயிலை ஏற்பாடு…

மேலும்...

சென்னையை மிரட்டும் கொரோனா – காரணம் என்ன?

சென்னை (02 மே 2020): சென்னையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 203 தொற்றுகளில் 176 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1082 நபர்களில், 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்துள்ளது சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 48 நபரும்,…

மேலும்...

மக்கள் எது சொன்னாலும் கேட்பதில்லை – அடுத்த அதிரடிக்கு தயாராகும் காவல்துறை!

சென்னை (02 மே 2020): கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் மக்கள் அதனை சரிவர பின்பற்றுவதில்லை என்பதால் காவல்துறை மேலும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 161 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 6 நாட்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது….

மேலும்...

பாரசிடமால் கொடுப்பதற்கு லாக்டவுன் எதற்கு? – மன்சூர் அலிகான் கேள்வி!

சென்னை (01 மே 2020): “கொரோனா என்று பாரசிடமால் கொடுத்து கொஞ்சநாள் வைத்திருந்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்; இதற்கு எதற்கு லாக்டவுன்?” என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று…

மேலும்...

இந்தியாவில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

புதுடெல்லி (01 மே 2020): இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்து வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு!

துபாய் (01 மே 2020): ஐக்கிய அரபு அமீரக தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஊதியங்கள் வழங்கப்படுவதை நிறுவன முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டினர் முன்…

மேலும்...

12 தப்லீக் ஜமாஅத்தினர் சிறைக்கு அனுப்பி வைப்பு!

ஷாஜஹான்பூர் (01 மே 2020): உத்திர பிரதேசத்தில் கொரோனா தனிமைப் படுத்தலுக்குப் பிறகு 12 தப்லீக் ஜமாஅத்தினர் தாற்காலிக சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் தப்லீக் ஜமாஅத்தினர் சிலரும் கொரோனாவால் பாதிக்கப் பட்ட நிலையில், தாய்லாந்தை சேர்ந்த 9 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் அரசின் உத்தரவை மீறியதாகக் கூறி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது தற்காலிக சிறைக்கு அனுப்பப் பட்டனர்….

மேலும்...

கீழிறங்கும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு!

வாஷிங்டன் (01 மே 2020): அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறியதன் விளைவு அங்கு அவரது செல்வாக்கு அதிவேகத்தில் சரிந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் தான் வேட்பாளர் என்பது ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியில் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடுமளவுக்கு வேட்பாளர்கள் இல்லாததால், ட்ரம்ப் தான் அடுத்த அதிபர் அரசியல்…

மேலும்...

தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு!

சென்னை (01 மே 2020): தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 3-ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, இதுவரை இல்லாத அளவாக 161 பேருக்கு வைரஸ்…

மேலும்...