இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுரம் ராஜன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (30 ஏப் 2020): ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார விளைவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விளைவுகள், சந்திக்க வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்து திரு. ராகுல் காந்தி, ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், “ கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல்…

மேலும்...

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கோரிக்கை!

கொழும்பு (29 ஏப் 2020): சென்னையில் கடந்த ஒரு மாதமாக சிக்கித் தவித்துவரும் 160 இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு வர வேண்டும் என வெளி விவகார அமைச்சுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கேவுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாடு திரும்ப முடியாமல் சென்னையில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்) மன உளைச்சலுக்கும்…

மேலும்...

உலக அளவில் கொரோனா தாக்குதல் 31 லட்சம் – பலி இரண்டு லட்சத்துக்கும் மேல்!

நியூயார்க் (29 ஏப் 2020): சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்தது. சீனாவின் வூஹான் நகரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உலக மக்களை, தனது அச்சத்தின் பிடியில் கொரோனா வைரஸ்…

மேலும்...

சென்னை மக்கள் பீதி – இன்று மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (29 ஏப் 2020): சென்னையில் இன்று (புதன்கிழமை) மட்டும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 2 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 94 பேருக்கும், செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், விழுப்புரத்தில் இருவருக்கும் இன்று…

மேலும்...

சலூன் கடைக்காரருக்கு கொரோனா – முடி வெட்டியவர்களுக்கு கொரோனா சோதனை!

சென்னை (29 ஏப் 2020): சென்னை கோயம்பேடு சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் முடி வெட்டியவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர், சென்னை நெற்குன்றத்தில் தங்கி, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு, கோயம்பேடு மார்க்கெட் ரோடு என 2 இடங்களில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் தனது சொந்த ஊருக்கு சென்றபோது அவரை ஒரு நாய் கடித்துள்ளது. அதனால்,…

மேலும்...

இந்த விசயத்தில் ஏமன் நாட்டுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்!

சனா (29 ஏப் 2020): ஏமன் நாடு கொரோனா தொற்று இல்லத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து வளைகுடா நாடான ஈரானிலும் பரவியது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் உள்நாட்டு போரால் அதிக பாதிப்புகளை சந்தித்த ஏமனில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் வைரஸ் பரவல் அதிகரித்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என அச்சம் எழுந்தது. இந்நிலையில் அந்நாட்டில்…

மேலும்...

சென்னை கோயம்பேட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

சென்னை (29 ஏப் 2020): சென்னை கோயம்பேடு மார்கெட்டில்உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் மேலும் மூவருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சென்னை முதல் முறையாக மார்ச் 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து ரயிலில் மூலம் வந்த வடமாநில வாலிபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனிடையே சென்னை…

மேலும்...

கொரோனா சோதனை முறையில் முரண்பாடான முடிவு – கருவிகளை சீனாவுக்கு அனுப்ப வலியுறுத்தல்!

புதுடெல்லி (29 ஏப் 2020): கொரோனா வைரசைக்‍ கண்டறிய சீனாவிடமிருந்து வாங்கப்பட்ட Rapid Test சாதனங்கள் துல்லியமாக செயல்படவில்லை என்றும், முரண்பாடான முடிவுகளைக்‍ காட்டுவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்‍ கழகம் ICMR தெரிவித்துள்ளது. இந்தக்‍ கருவிகளை உடனடியாக சீனாவுக்‍கு திருப்பி அனுப்புமாறும் அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், வைரஸ் நோயை விரைவாகக்‍ கண்டறிய Rapid Test Kit சாதனங்கள் சீனாவிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இந்த…

மேலும்...

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? -பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (27 ஏப் 2020): ஊரட‍ங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து, மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அடுத்த மாதம் 3-ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி…

மேலும்...

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி (27 ஏப் 2020): நாட்டில் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்‍கு 40 ஆயிரம் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், குறைந்தபட்சம் நாள்…

மேலும்...