கொரோனாவால் அலறும் சென்னை – ஹாட் ஸ்பாட் ஆன கோயம்பேடு!

சென்னை (03 மே 2020): கடந்த 4 நாட்களாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கோயம்பேடு மட்டுமல்லாமல் மற்ற காய்கறி சந்தையிலும் மக்கள் குவிந்தனர். அதன் விளைவாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. அதன் தாக்கத்தை சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்பு விவரத்தில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. இந்த 10…

மேலும்...

முன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்!

புதுடெல்லி (03 மே 2020): நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிட தொடங்கப்பட்டுள்ள நலநிதிக்கு முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்டோர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். அந்தப் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஐசிஏ) சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் வீரர்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஐசிஏ சார்பில் 10 லட்ச ரூபாய்…

மேலும்...

புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு!

கிருஷ்ணகிரி (03 மே 2020): ஆந்திராவின் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்...

கமல் விஜய்சேதுபதி இடையே காரசார வார்த்தைப் போர்!

சென்னை (03 மே 2020): கமலின் கருத்துக்கள் புரியவில்லை என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு நடிகர் கமல் காரசாரமாக பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் பேச்சோ அல்லது சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துக்களோ பலருக்கும் புரியவில்லை என்ற குறை பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது. மே 1அன்று ஊரடங்கு தொடர்பாக அவர் பதிவிட்ட டுவீட் பலருக்கும் புரியவில்லை என்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நடிகர் கமல் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் பேசினார் கமல். இவரை…

மேலும்...

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி – மத்திய அமைச்சர் தகவல்!

புதுடெல்லி (03 மே 2020): சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை நிலவி வருகிறது. இந்நிலையில்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டவாரியாக விவரம்!

சென்னை (03 மே 2020): தமிழகத்தில் இதுவரை 2757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 142 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 88 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 81 பேருக்கும்,…

மேலும்...

டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு!

புதுடெல்லி (03 மே 2020): டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளத்தில் பதிந்த பதிவு மத உணர்வுகளை தூண்டுவதாக அமைந்ததாகக் கூறி வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது போலீசில் புகார் அளித்தார். அதில் இரு சமூத்தினரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில், பகைமை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு ஒரு…

மேலும்...

கொரோனா பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம்!

புதுடெல்லி (02 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று, இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி, கொரோனா பாதிப்புடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில தினங்களாக அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். ஆனால் சனிக்கிழமை இரவில்…

மேலும்...

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

சென்னை (02 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,757 அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் இன்றுவரை 1,341…

மேலும்...

இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்கள் உதவி!

துபாய் (02 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் எடையுள்ள மருந்து பொருட்களை அனுப்பி சனிக்கிழமை அன்று வைத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறியதாவது: “கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக போராடும் நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தங்களது முழு ஆதரவை வழங்கி வருகிறது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்…

மேலும்...