திமுக எம்.எல்.ஏ மரணம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஜெ.அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் காலமானார்!

சென்னை (10 ஜுன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது….

மேலும்...

கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் மரணம்!

ஷார்ஜா (09 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவை சேர்ந்த நடிகர் எஸ்.ஏ.ஹாசன் ஷார்ஜாவில் உயிரிழந்துள்ளார். துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ்.ஏ.ஹாசன், கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ”ஹலோ துபாய்க்காரன்” என்ற மலையாள படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சார்ஜாவின் ரஸ் அல் ஹைமா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக…

மேலும்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவு என்ன சொல்கிறது?

புதுடெல்லி (09 ஜூன் 2020): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறப்பட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து…

மேலும்...

பாஜக தலைவர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (09 ஜூன் 2020): பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தெற்கு டெல்லியின் சாக்கெட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளை கண்ட பின்னர் கடந்த 4 நாட்களாக மேக்ஸ் சாகேட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டியிருந்தாலும், அவரது தாயார் அறிகுறியில்லாமல் இருந்தார். தற்போது இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி…

மேலும்...

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

சென்னை (09 ஜூன் 2020): எதிர் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா? அல்லது தேர்வு…

மேலும்...

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறும் பாஜக எம்பி!

புவனேஸ்வர் (09 ஜூன் 2020): சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறி வருகிறார் ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி. நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.பி. அபராஜிதா சாரங்கி, பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் சென்று நேற்று கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளி…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு செவ்வாய்க்கிழமை நிலவரம்!

புதுடெல்லி (09 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடந்து அதிகரித்தவண்ணமே உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் 9,987 அதிகரித்து 2,66,598 ஐ எட்டியுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 266 அதிகரித்து 7,466 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார விவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருமல் – பரபரப்பில் திமுகவினர்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருமல் இருந்ததால் கொரோனா அறிகுறியாக இருக்குமோ என அவரது உறவினர்களும் திமுகவினரும் பதற்றத்தில் காணப்பட்டனர். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவைரஸ் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், மிகுந்த வருத்ததில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஸ்டாலினுக்கு திடீரென தொடர்ந்து இருமலும், லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால்…

மேலும்...