சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறும் பாஜக எம்பி!

Share this News:

புவனேஸ்வர் (09 ஜூன் 2020): சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறி வருகிறார் ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி.

நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.பி. அபராஜிதா சாரங்கி, பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் சென்று நேற்று கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளி விதிகளை மீறி அவர் செயல்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவரின் செயலுக்கு ஆளும் பிஜு ஜனதா தளம் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஊரடங்கு விதிகளை பின்பற்றி மக்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அவர் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.


Share this News: