அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவு என்ன சொல்கிறது?

புதுடெல்லி (09 ஜூன் 2020): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறப்பட்டது.

இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது.

கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அதன்பிறகு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவர் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்: