பாஜக தலைவர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (09 ஜூன் 2020): பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தெற்கு டெல்லியின் சாக்கெட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளை கண்ட பின்னர் கடந்த 4 நாட்களாக மேக்ஸ் சாகேட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டியிருந்தாலும், அவரது தாயார் அறிகுறியில்லாமல் இருந்தார். தற்போது இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவும் கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பிட் பத்ரா திங்கள்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News: