தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க உத்தரவு!

சென்னை (17 நவ 2021): தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும், விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. மேலும், இதுவரை…

மேலும்...

கத்தாரில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கால அளவு மாற்றம்!

தோஹா (16 நவ 2021): கத்தாரில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது இரண்டு டோஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையும் என்ற…

மேலும்...

சிங்கப்பூரில் சீறிப்பாயும் கொரோனா!

சிங்கப்பூர் (28 அக் 2021): சிங்கப்பூரில் இன்று (அக்.,28 ம் தேதி) சில மணி நேரங்களிலேயே 5,324 பேரை கொரோனா தாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள வேற்று நாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகளில் வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 66…

மேலும்...

சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!

ரியாத் (25 அக் 2021): சவூதிக்கு பயணத் தடை உள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை (விசிட்) விசாவின் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பயணத் தடை உள்ள ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். . கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 666 பேர் பலி!

புதுடெல்லி (23 அக் 2021): இந்தியாவில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 9,361 பேர்) மேலும் கேரளாவில் 99 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதன்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்ததாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தின்…

மேலும்...

சீனாவை மீண்டும் மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்!

உகான் (22 அக் 2021): சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இன்னும் முடிந்த பாடில்லை. இந்நிலையில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல…

மேலும்...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் – சவூதி சுகாதாரத்துறை அறிவிப்பு!

ரியாத் (21 அக் 2021): 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவதற்கு சவூதி சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே தீவிர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் கோவிட் வளரும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு கோவிட் பூஸ்டர் ஊசி வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் ஊசி வழங்க சவூதி சுகாதாரத்துறை…

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தம்!

புதுடெல்லி (18 செப் 2021): இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவூதி அரேபியா இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சார்ட்டட் விமான சேவை மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது UAE கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மூலம் இணைப்பு விமான சேவைகள் இப்போது இலகுவாக கிடைக்கின்றன. இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சவுதி அரேபியாவிலிருந்து…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேட்டால் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

சென்னை (06 செப் 2021): கோவிட் சூழலில் பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேடு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை வளைகுடா நாடுகளிலிருந்து ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிரங்கின. அதில் வந்த ஏராளமான பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க எடுக்கப்படும் மிக முக்கிய நடவடிக்கை சமூக இடைவெளி. ஆனால் அது சென்னை விமான நிலையத்தில்…

மேலும்...