சிங்கப்பூரில் சீறிப்பாயும் கொரோனா!

Share this News:

சிங்கப்பூர் (28 அக் 2021): சிங்கப்பூரில் இன்று (அக்.,28 ம் தேதி) சில மணி நேரங்களிலேயே 5,324 பேரை கொரோனா தாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள வேற்று நாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகளில் வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 66 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 76 பேர் மிதமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


Share this News:

Leave a Reply