18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் – சவூதி சுகாதாரத்துறை அறிவிப்பு!

Share this News:

ரியாத் (21 அக் 2021): 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவதற்கு சவூதி சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே தீவிர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் கோவிட் வளரும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு கோவிட் பூஸ்டர் ஊசி வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் ஊசி வழங்க சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

டோஸ் எடுக்கும் தேதியை ஸ்விஹாட்டி மற்றும் தவக்கல்னா ஆப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு டேஸ் போட்டு ஆறு மாதங்கள் கழித்து முடித்தவர்கள் மூன்றாவது பூஸ்டர் டோஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply