தினமணியின் நேர்கொண்ட பார்வை தகனம் செய்யப் பட்டுவிட்டது – ஜவாஹிருல்லா பகிரங்க கடிதம்!

சென்னை (04 ஏப் 2020): மததுவேஷத்துடன் வந்துள்ள தினமணியின் தலையங்கத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா தினமணிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இதுகுறித்த அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ‘மன்னிக்கக்கூடாத குற்றம்’ என்ற தலைப்பில் 4.4.2020 தேதியிட்ட தினமணியின் தலையங்கம், உண்மைக்குப் புறம்பானதாகவும், மதவெறுப்பை விதைப்பதாகவும் அமைந்துள்ளது. மனிதகுலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாகக் கிளம்பியுள்ள கோவிட்-19 என்ற கொரோனா தீநுண்மிக்கெதிராக சாதி, மத, தேச எல்லைகள் கடந்து உலகு தழுவிய அளவில் மனித சமுதாயம்…

மேலும்...

கொரோனா பரவல் முடிவுக்கு வருமா? – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம்!

நியூயார்க் (04 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரியற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் கணித்துள்ளார். வேதியியலுக்கான 2013 நோபல் பரிசை வென்ற லெவிட், சீனாவில் தொற்றுநோய் பற்றி முன்னரே கணித்து கூறினார். மேலும் பல சுகாதார வல்லுநர்கள் கணிப்பதற்கு முன்பே அதன் பேரழிவு தன்மை குறித்தும் விளக்கி இருந்தார். தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும் போது “பீதியைக் கட்டுப்படுத்துவது…

மேலும்...

செய்ய வேண்டியதை விட்டு கை தட்டுவதும் விளக்கேற்றுவதும் சரியா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (04 ஏப் 2020): போதிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் மக்களைக் கை தட்ட வைப்பதும், விளக்கேற்ற வைப்பதும் கரோனா பிரச்னைக்குத் தீர்வைத் தராது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் போராட்டத்தில் இந்தியா போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. மக்களைக் கை தட்டவைப்பதும், வானத்தை நோக்கி ஒளி எழுப்பச் செய்வதும் பிரச்னையைத் தீர்க்காது” என்றார். இந்தியாவில் பத்து லட்சத்தில் 29…

மேலும்...

கொரோனாவுக்கு தமிழகத்தில் மூன்றாவது பலி!

தேனி (04 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மூன்றாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா பாதித்தவர்கள் இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 411 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. “தேனியைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிப்பு நபரின்…

மேலும்...

கொரோனா வைரஸ்: கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி (04 ஏப் 2020): மேலப்பாளையத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி, சுகாதார துறை அதிகாரிக உடன், ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி. ஏ. காஜா மொய்னுதீன் அவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மேலப்பாளையத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி மற்றும் அனைத்து அடிப்படை தேவைகள் குறித்தும் கூட்டத்தில்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மரணம்!

விழுப்புரம் (04 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்காக இரண்டாவதாக ஒருவர் பலியாகியுள்ளார். விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த 51 வயது ஆண் கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலையில் அவர் உயிரிழந்தார். மேலும் பலியானவர் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மதுரையைச்…

மேலும்...

கேரளாவில் இருவருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பாசிட்டிவ்!

திருவனந்தபுரம் (04 ஏப் 2020): கேரளாவில் இருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை  68-ஆக உயா்ந்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் அதிக அளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு இருவருக்கு எந்தவித அறிகுறிகளும்…

மேலும்...

கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலா – வெளிநாட்டு பயணிகளுக்கு அரசு அனுமதி (வீடியோ)

புதுடெல்லி (03 மார்ச் 2020): கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலாவுக்கு வெளிநாட்டு பயணிகளை அரசு அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரண்டு சொகுசு பேருந்துகளில் சென்றுள்ளனர். இதனை ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ் என்ற தொலைக்காட்சி சேனல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. அந்த சேனலின் செய்தியாளர் சுற்றுலா பயணிகளிடமும், சுற்றுலா வழிகாட்டியிடமும் “இந்த நெருக்கடியான சூழலில் எப்படி வெளியே வந்தீர்கள்? எப்படி சுற்றுலா செல்ல முடிந்தது?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால்…

மேலும்...

கொடிய நோயின் கோரத்தாண்டவமும் அரசின் நடவடிக்கையும்- ‘அம்வாஸின் பிளேக்’ வரலாற்றுக் குறிப்பு!

பாலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 639-ம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது. சிறிது சிறிதாகப் பரவியது. வெகு விரைவில், அது பெருந் திகிலூட்டும் நிகழ்வாகவும் மாறியது. `அம்வாஸின் பிளேக்’ என்ற பெயரில் வரலாற்றில் வெகு அழுத்தமாகப் பதிவாகும் அளவுக்குப் பிரமாண்டமாய் உருமாறியது அந்நோய். இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் காலத்தை அறிந்தவர்களுக்கும் பல வாசகர்களுக்கும் உமர் என்ற பெயர் அறிமுகமாகியிருக்கும். முஸ்லிம்களுக்கும் நபி பெருமானாருக்கும் பெரும்…

மேலும்...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!

வாஷிங்டன் (03 ஏப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டர்ம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு பின் நாட்களில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டிரம்புக்கு கொரோனா…

மேலும்...