செய்ய வேண்டியதை விட்டு கை தட்டுவதும் விளக்கேற்றுவதும் சரியா? – ராகுல் காந்தி விளாசல்!

Share this News:

புதுடெல்லி (04 ஏப் 2020): போதிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் மக்களைக் கை தட்ட வைப்பதும், விளக்கேற்ற வைப்பதும் கரோனா பிரச்னைக்குத் தீர்வைத் தராது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் போராட்டத்தில் இந்தியா போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. மக்களைக் கை தட்டவைப்பதும், வானத்தை நோக்கி ஒளி எழுப்பச் செய்வதும் பிரச்னையைத் தீர்க்காது” என்றார்.

இந்தியாவில் பத்து லட்சத்தில் 29 பேருக்குத்தான் பரிசோதனையே செய்யப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள ராகுல், உலகின் பிற நாடுகள் சிலவற்றுடன் ஒப்பிட்டு, 10 லட்சம் பேருக்கு அவை மேற்கொள்ளும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை எண்ணிக்கையைக் கொண்ட புள்ளிவிவரப் படத்தையும் இணைத்துள்ளார்.


Share this News:

Leave a Reply