இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல் :ஏப்ரல் 2 முதல் வீடுவாரியாக டோக்கன் வழங்கப்படும்!

சென்னை (01 ஏப் 2020): தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தொடங்குகிறது. தமிழக அரசு அரிவித்துள்ள இந்தத் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. நாளொன்றுக்கு சுமாா் 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வாரியாக டோக்கன் வழங்கப்படும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று…

மேலும்...

கொரோனா பரவலுக்கு முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதா? – ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (01 ஏப் 2020): கொரோனா பரவலுக்கு முஸ்லிம் சமுதாயம் மீது பழி போட்டதற்கு தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய்க் கிருமி பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத் எனும் சிறுபான்மை ஆன்மிகக் குழு ஒன்றின் செயற்பாடே காரணம் என்ற அடிப்படையில் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற பெயர் கூட இல்லாமல் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள…

மேலும்...

ஈஷா யோகா மைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் உரிய பரிசோதனை: முதல்வர் அறிவிப்பு!

சென்னை (01 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்க கோவை ஈஷா மைய கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் உரிய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். அதனால்தான் 144 ஊரடங்கு…

மேலும்...

கொரோனா வைரஸ்: திணறும் வல்லரசுகள் – 40 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

நியூயார்க் (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து தொடங்கி உலகமெங்கும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். 41,000 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அதிக உயிரிழப்பை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

தோஹா (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கத்தாரில் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் தடையில்லாமல் வழங்கப்படும் என்று கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் தொழில்துறை உயர் அதிகாரி முஹம்மது ஹசன் அல் உபைத் அலி தெரிவிக்கையில், “கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தங்கியிருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் மாதத்தின் முதல் வாரத்திலேயே…

மேலும்...

கொரோனா தடுப்பு – கலக்கும் கேரளமும் தமிழகமும்!

சென்னை (31 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் முதலாக அடி எடுத்து வைத்த மாநிலம் கேரளா. தற்போது அங்கு 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடனேயே தற்காப்பு நடவடிக்கைகளில் களம் இறங்கிவிட்டது தமிழகம். கேரளா ஏற்கனவே எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருப்பதால் கேரளா மேற்கொண்ட தடுப்பு மற்றும் மருத்துவ நிவாரண முறைகளைக் கண்டு வியந்தவர்கள் அதே போன்று தங்கள் மாநிலத்திலும் நடை முறைப்படுத்துகின்றனர்….

மேலும்...

ஈஷா யோகா மையத்தில் கொரோனா உண்டா? – அதிகாரிகள் பரிசோதனை!

கோவை (31 மார்ச் 2020): ஈஷா யோகா மையத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உண்டா? என சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். கடந்த மாதம் கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் அங்கு தற்போதும் பல வெளிநாட்டவர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் உண்டா? என்பது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். வட்டார…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்வு!

சென்னை (31 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணைக்கை 124 ஆகா உயந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், “சென்னையில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் தில்லி…

மேலும்...

கொரோனா சிகிச்சைக்காக தயாராகும் விளையாட்டு மைதானம்!

நியூயார்க் (31 மார்ச் 2020): நியூயார்க்கில் உள்ள பிரபல ஓபன் டென்னிஸ் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிரபலமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை தற்காலிக மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 17,000 ரசிகர்கள் அமர்ந்து…

மேலும்...

தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ரூ 1 கோடி நிதி!

சென்னை (30 மார்ச் 2020): கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு தொகுதி நிதியிலிருந்து ரூ 1 கோடி வழங்குவதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும், பெருந்தொற்று நோயான கொரோனா தடுப்புப் பணிகளுக்‍காக, தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளருக்‍கு திரு.டிடிவி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனிடையே, திரு.டிடிவி தினகரன் தலைவராகப்…

மேலும்...