குடிகாரர்களின் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு திண்டாட்டம்!

சென்னை (07 மே 2020): என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்தபடியே டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே விபத்துக்களும் நடக்க தொடங்கியுள்ளன. பலவித எதிர்ப்புகள் வந்தாலும் அரசு உறுதியாக இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை இன்று திறந்தது. ஆனால் எங்கும் சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பயந்தபடியே வன்முறைகளும், விபத்துக்களும் நடக்க ஆரம்பித்துள்ளன.. மதுரை அலங்கநல்லூரில் கணவன் குடித்துவிட்டு வந்தார் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. இப்போது…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 409ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 316 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் பாதிக்‍கப் பட்டவர்களின் மொத்த…

மேலும்...

சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் மரணம்!

ஜான்பூர் (07 மே 2020): கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உத்திர பிரதேச தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் பரவல் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்த வேலையில் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர்தான் கொரோனாவை பரப்பியதாக ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது. அதேவேளை தப்லீக் ஜமாத்தினர் சிலருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது….

மேலும்...

பேருந்துகள் இயக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்!

சென்னை (07 மே 2020): ஊரடங்கு முடிவடைந்த பின்னர், 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மே 17-க்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்படும் போது, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முகக் கவசம், கையுறை மற்றும் hand sanitizer வழங்கப்படும் என்றும், பேருந்தை இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்ப, இருக்கைகளில் மார்க் செய்ய வேண்டும் என்றும், பேருந்தில் நின்று கொண்டே…

மேலும்...

திமுக கூட்டணி கட்சிகள் செய்யவுள்ள காரியம் தெரியுமா?

சென்னை (07 மே 2020): மதுக் கடைகள் திறப்பதை எதிர்த்து பொதுமக்கள்,இன்று, 7ம் தேதி கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’ என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: “கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை…

மேலும்...

சென்னையில் முதல்வர் எடப்பாடி வீட்டு பெண் காவலருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா பாதித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை…

மேலும்...

குஜராத்தில் கொரோனா பரவ நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (07 மே 2020): பிப்ரவரி 24 ம் தேதி குஜராத்தில் மாநில பாஜக அரசு ஏற்பாடு செய்த “நமஸ்தே டிரம்ப்” நிகழ்வே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று குஜராத் காங்கிரஸ் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு எதிராக அவர்கள் விரைவில் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா தெரிவித்தார். மேலும் திரு சாவ்தா…

மேலும்...

கொரோனா :அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஷ்யா!

மாஸ்கோ (07 மே 2020): ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,599 பேருக்கு கொரோனா இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்க உல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவிலும் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 10 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு சென்றது. இந்நிலையில்மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,599 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது….

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இது தமிழகத்திலும் அதன் வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் புதன் கிழமை மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 771 பேரில் 575 பேர் ஆண்கள், 196 பேர் பெண்கள் ஆவர்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த…

மேலும்...

இதை நீங்கள் தராமலே இருந்திருக்கலாம் – அதிமுகவினர் மீது பொதுமக்கள் பாய்ச்சல்!

கோவை (06 மே 2020): கோவையில் அதிமுகவினர் ஆட்களுக்‍கு ஏற்றவாறு நிவாரண பொருட்களை வழங்கியதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்களுக்கு கொரொனா நிவாரண பொருட்கள் தருவதாக கூறி அதிமுகவினர் டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மளிகை பொருட்களை பெற்ற பொதுமக்கள், அவை தரமற்றதாக இருப்பதாக குறி அதிமுகவினரிடமே திருப்பிக்கொடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல், தொண்டாமுத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளான முத்தண்ணன்குளம், பால்கம்பெனி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்களுக்கும், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிமுகவினர்…

மேலும்...